பக்கம்:புதையலும் பேழையும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 283

'உருவம்' எனப்பட்டது. 'நின்று இரண்டு உருவம் ஓதி' எனச் சீவக சிந்தாமணி பாடுகின்றது. இவ்வகை உருவில் போற்றியும் அடங்கும். எனவே, தமிழில் போற்றி நூல்கள் இருந்து கடல் கோளால் அழிந்தன என்று அறிய முடிகின்றது.

மக்கள் தாமே நீராட்டி, மலர் படைத்து ஏற்றும் முன்ற தேவார மூவர், திருவாதவூரர். திருமூலச் சான்றோர் காலத்தி லும் இருந்ததை அவர்களது வாய்மொழிகள் பேசுகின்றன.

"பூவோடு நீர்சுமந்து ஏத்திப் புகுவார்"

-திருநாவுக்கரையர்.

"பூவும் நீரும் பலியும் சுமந்து புகலூரையே

நாவி னாலே நவின்று ஏத்தல் ஒவார்"

-திருஞானசம்பந்தர். "குடமெடுத்து நீரும் பூவுங் கொண்டு”

-சுந்தரர்.

'பரந்துபல் ஆய்மலர் இட்டு முட்டாது அடியே

இறைஞ்சி இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும்

அன்பர்'

- - -மாணிக்கவாசகர். சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி"

-திருமூலர்.

இவர்கள் காலத்தில் மக்கள் தாமே வழிபாடியற்றும் பழக்கத்தோடு வடமொழி மந்திரமும் ஓதி அருச்சிக்கும் பழக்கமும் ஆங்காங்கு தலையெடுத்தது. -

மறைகலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார்

வானாளக் கொடுத்தி யன்றே"

-என்றார் அப்பரடிகள்.

SiSMMMTAAASSSAS

1 :வ, சி ; 1289 : 4. 2 அப், தே : திருமழபாடி 2 2.