பக்கம்:புதையலும் பேழையும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 - புதையலும்

தமிழ்ப்பாட்டு வியத்தகு செயல்களை விளைவித்தது என்பர், -

தமிழ் எழுதப்பட்ட ஏடு நீரில் ஏறி, நெருப்பில்; நின்றது. மறைக்காட்டுக் கதவு திறந்தது; அடைத்தது. ஆண்பனை பெண் பனை ஆகியது. எலும்பு, பெண்ணாகியது, நஞ்சு நீங்கியது; நஞ்சு அமுதாகியது. சுடுகாளவாய் சுரும்பு சூழ் தடாகம் ஆனது. யானை பணிந்தது. கடலில் கல் மிதந்தது. நெல்லும் பொன்னும் சோறும் வந்தன. ஆரூர்த் தெருவில் இறைவனே நடந்தான்; இழந்த கண்கள் மீண்டன. முதலை உண்ட குதலை மீண்டான். வெள்ளை யானை வந்தது. நோய்கள் தீர்ந்தன. பகைகள் முறிந்தன. இவ்வாறு பட்டியல் நீண்டது. யாவும் தமிழ்ப் பாட லால் என்று காண்கின்றோம்.

வள்ளலார் இவையெல்லாம் கூட்டி,

'வடிக்குறுந் தமிழ்கொண்டு அன்பருக் கருளும்

- வள்ளல்'

- என்கின்றார். தமிழ் இறைவனது அருளைப் பெறும் தகுதி உடைய தாகின்றது.

தமிழ் இறைவன் உணவு.

தமிழ்ப்பாட்டு இறைவனுக்கு உவப்பானது; அவனது அருளைச் சுரக்கவைப்பது மட்டும் அன்று. இறைவனுக்கு உண வாகவும் அமைந்தது. -

இறைவனை வந்திக்கும் முறைகளுள் வெந்தழல் வளர்த்து வேள்வி செய்யும் முறை வடவரால் உண்டாக்கப்பட்டுத் தமிழகத் தில் புகுத்தப்பட்டது. திருவள்ளுவப் பெருந்தகையார்,

'அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று' - - என்று மாற்று முறை யால் வேள்வியைக் குறிப்பாகக் கண்டித்தார். இக்குறளில் குறிக் கப்படும். அவி இறைவனுக்கு உரிய உணவு என்னும் பொருளி

1 திருவருட்பா : திருமுறை : 2 : 48 : 8. 2 குறள் : 259 • ‘