பக்கம்:புதையலும் பேழையும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 287

னது. இறைவனுக்குரிய உணவாகப் பலிப்பொருள்களை வேள் வியின் தீக்குழியில் நெய் சொரிந்து இடுவர். அஃது அவி எனப் படும். தீயில் வெந்து ஆவியாய் அவிவதால் - ஆவியாவதால் (அவி - ஆவி - அவி) அவி எனப்பட்டது. வேள்வித் தி இல்லா மலே - வேள்வி செய்ய மாட்டாராய் - தமிழ்ப்பாட்டை அவியாக இறைவனுக்கு ஊட்டினார் திருமூலர். காலையில் பாடி ஊட்டினார்; மாலையில் பாடி ஊட்டினார். அதைப் பாடுகின்றார்: -

"வேட்டுஅவி உண்ணும் விரிசடை நந்திக்குக் காட்டவும் யாமிலம் காலையும் மாலையும் ஊட்டுஅவி யாவன உள்ளம் குளிர்விக்கும் பாட்டு அவி காட்டுதும் பால்அவி யாமே” -என்பது அவர் ஊட்டும் பாட்டு. அதன்கண் உள்ளம் குளிர்விக் கும் பாட்டை அவி என்கின்றார். தீக்குழி வழியாகச் செல்லாத அவி அன்றோ? அதனால் அது குளிர்ந்து பால் போன்ற சுவை யான உணவு ஆயிற்றாம்.

வெந்தழல் வளர்க்கும் வேள்விமுறை செந்தமிழ்த் திரு மூலர்க்கு ஒத்தது அன்று போலும். அதனால்தான், "காட்டவும் யாம் இலம்' என்று இப்பாடலிலும் குறித்தார். பின்னரும்,

'நன்னெறி செல்வார்க்கு ஞானத்தின் ஏகலாம்;

புன்னெறி யாகத்திற் போக்கில்லை தானே”

- . . -என்றார். வேள்வி முறை தாழ்வானது என்பதை 'புன்னெறி யாகம்” என்பதால் குறித்தார்.

இப்பாடல் (வேட்டு அவி பாடல்) "சிவ பூசை'யை விளக்கும் பகுதியில் அமைந்த பாடல் என்பதைக் குறிக்க நேர் கின்றது. வழிபாட்டு - பூசெய் முறையாகத் தமிழ்ப்பாட்டைப் படைத்தலைக் கூறினார் என்பதை இவ்விடத்தில் நினைவிற் கொள்ளவேண்டும்.

திருமந் : 1824, 2 திருமந் : 555,