பக்கம்:புதையலும் பேழையும்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 247

தொகுத்துப் போற்றியாக்க வேண்டும். திருக்குறள் முதல் தமிழ்த் தெய்வ நூல்கள் யாவற்றிலிருந்தும் அவற்றைத் தொகுக்கலாம். தொகுத்து வழிபாடு இயற்றலாம். அருச்சனை - வழிபாடு என்ப தைப் போற்றி என்றே வழங்கலாம்.

முடிவுரை ஒன்றே.

தமிழ்ப் போற்றிக்கு விரிவான விளக்கம் கூறுதலும், சமய சான்றோரைச் சான்றுக்கு அழைத்தலும், இலக்கண இலக்கியங் களிலிருந்து சான்றுகள் காட்டுதலும் இவைபோன்ற எவையும் ஒரு தொடருக்கு முன் வேண்டாதனவே. அந்தத் தொடர். பின் வருவது. இத்தொடரே முடிந்த முடிவுரை:

தமிழ் நாட்டில் தமிழ்.