பக்கம்:புதையலும் பேழையும்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதையலும் பேழையும்

கட்டுரைகள் நாட்டும் ஆய்வு முடிபுகள்

1

2

'அம்மா’ என்னுஞ் சொல் தமிழ்மொழியின் முதற்சொல். - ஒரு சொல் தனித்து நின்றும் தொடர்மொழியில் அமைந்தும் பொருட் கிளை விடும். (தலை என்னுஞ் சொல் சான்று)

8 பிறந்த நாள் விழா தமிழ் நாட்டு மரபு.

10

11

12

13

14

முகவை மாவட்டப் பகுதி, திருவள்ளுவர் வாழ்ந்த

நிலப்பகுதியாகும். தமிழ்நாட்டில் குடியிருப்பின் தோற்றமும் வளர்ச்சியும் ஆறு பருவ காலங்களுக்கேற்ற ஆறு மாடிகளாக எழுந்தது எழுதிலை மாடம். தமிழ்நாட்டுக் கம்பம்-சுருளிமலைப் பகுதி நெடு வேள் குன்றக் கோட்டமே சேரன் செங்குட்டுவன் எடுத்த கண்ணகியார் சிலையமைந்த கோட்டம். மகளிர் மார்பெனும் உறுப்பு மூன்று பகுதிப் பெயர் கொண்டது. கண்ணகியார் திருகி எறிந்தது முலைக்காம்புப் பகுதி, அது நிகழ்ந்ததே. சிலப்பதிகாரம் வரலாற்றுக் காப்பியமே. முகில் கடல் நீரை முகந்து கருக்கொள்ளும்' என்பது, கண்காணும் உண்மை. - கடவுள் வழிபாட்டு முறைகள் வடமொழியாளரால் உண்டாக்கப்பட்டவை. தோற்றத்தில் வழிபாடு தமிழ் மொழியிலேயே இருந்தது.

தமிழ் மொழி கடவுள் வழிபாட்டிற்குப் பொருத்தமும் தகுதியும் உடையது.