பக்கம்:புதையலும் பேழையும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் o

அம்மா’ என்பதற்குப் பெயர்ப் பொருள் அச்சொல்லுக்கு, முதற்பொருளன்று. வழக்குப் பெருக்கத்தில் அமைந்ததே. ஆதலின் இலக்கியம் முதலியவற்றில் உரிய இடம் பெறாமை இயல்பாகலாம். ஆனால், அம்மா’ என அழைக்கும் விளிப்பொருள் அச்சொல்லின் முதற்பொருள். முதற்பொருள் என்று குறிக்கும்போதே அது மூலப் பொருள் அன்று என்பதையும் குறிக்கவேண்டும். அதனைப்பின்னர் கான்போம். மக்கள் எல்லாரும் விளிப்பொருளில் இச்சொல்லை வழங்குகின்றனர். நாள்தோறும் இச்சொல்லால் தாயை அழைக் கின்றனர். அழைக்கும் எண்ணத்தின் வெளிப்பாடாக மட்டும் அன்று; உள்ளத்தில் ஊறிய உவப்பை அழைப்பாக்கி அவ்வழைப் பின் வெளிப்பாடாக இச்சொல் அமைகின்றது. 'அம்மா’ என்னும் அழைப்பில், அழைப்போன்ரின் ஆர்வ உணர்வு உள்ளிடாக இசைக்கின்றது. 'அம்மா’ என்னும் சொல்லுக்கு இந்த அளவு பொருட் சிறப்பு உண்டு என அச்சொற்கு இலக்கியப் பொருள் விரிப்பது போன்று பெருமாள் திருமொழி,

'அம்மா என்று உகந்து அழைக்கும்

ஆர்வச் சொல்' .

-என்று பேசுகின்றது,

அம்மா என்று அழைத்தல்” -என்று பாவேந்தர் விளிப்பொருளைச் சுட்டிச் சிறப்பித்ததை முதலில் கண் டோம்.

போ அம்மா என்று உரைப்பப் போவேன்' -என்று திருத்தக்க தேவர் சீவக சிந்தாமணியில் அமைத்துள்ளார்.

இவ்வாறு இங்கொன்றும் அங்கொன்றுமாக 'அம்மா இலக் கியங்களில் அமைந்துள்ளதேயன்றிப் பரந்துபட்ட ஆட்சி யாக இல்லை. 'இல்லை’ என்னும் போதே 'இருப்பதற்கு வழி யிருந்தும் இல்லை’ என்பதைக் காணவேண்டும்.

எவ்வாறு காண்பது?

தாய், தந்தை மகள், மருகன், அத்தை முதலிய பெயர்களை இலக்கண நூல் முறைப்பெயர் என்று குறிக்கும். தாயைக்குறிக்கும்

1 பெரு . திரு 9 ே . . . ... .