பக்கம்:புதையலும் பேழையும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 புதையலும்

முறைப்பெயர்ச் சொற்களில் ஐகாரத்தை (ஐ) இறுதியாகக்கொண்ட சொற்கள் அன்னை, அம்மை, அம்மனை, அவ்வை என்பன. இவை விளி ஏற்கும்போது 'ஐ', 'ஆ' ஆகி வரலாம். அம்மை, அம்மா ஆகலாம். இதனைத் தொல்காப்பியம், s -

"முறைப்பெயர் மருங்கின் ஐயென் இறுதி

ஆவோடு வருதற் குரியவும் உள' எனக் குறித்துள்ளது. ஆயினும், இந் நூற்பாவிற்கு எடுத்துக் காட்டு தந்த உரையாசிரியர்கள் 'அன்னை - அன்னா’ எனக் காட்டினார்; அம்மை - அம்மா’ எனக் காட்டினர் அல்லர். இங்குக் காட்டாத நச்சினார்க்கினியர் சீவக சிந்தாமணியில் இந்நூற்பா வையே காட்டி 'அம்மை - அம்மா என விளியேற்றது' என்று உரை எழுதினர். ஒர் எடுத்துக்காட்டு கொண்டு மற்றவற்றையும் கொள்ளலாம் என்னும் முறை கொண்டும் சிந்தாமணியில் காட்டி யமை கொண்டும் 'அம்மா’, ‘அம்மை யினின்றும் தோன்றியது எனக் கொள்ளலாமோ எனின் அதற்கு ஒர் இடையீடு நேர்கின்றது. அம்மை என்னும் சொல் பின்னே காட்டப்படும் மூலச்சொல்லின் விரிவாய் அமைகின்றது. அதனாலும் அம்மூலச் சொல்லிலிருந்தே அம்மா தோன்றுவதற்கு உரிய ஒலியை எழுப்பும் உறுப்பினது இயக்கம் பொருத்தமாய் அமைவதாலும் அம்மையிலிருந்து அம்மா தோன்றியது என நிறைவாகவும் பொருத்தமாகவும் கொள்ள இயல வில்லை.

எனவே, அம்மா' என்பதன் மூலச்சொல் 'அம்மை’ என அறுதியிட்டுக் கூற நிறைவான வகையில்லை. -

அவ்வாறாயின், அம்மா’ என்னும் விளிப்பொருளைத் தரும் சொல்லின் மூலச் சொல் எது? எச்சொல் அம்மா’ என உருப் பெற்றது? இவ்வினாவிற்குத் தொல்காப்பியம் விடை வகுக்கிறது.

'அம்ம’ என்றொரு இடைச்சொல் உண்டு. அதற்கு

அம்ம @ఖిత్త ಹ' என்பது குறிப்புப்பொருள், அஃதாவது, நாம் பிறரிடம் ஒரு கருத்தைச் சொல்லும் முன் அவர்

. . கவனத்தை நம்மிடம் திருப்பி அவரைக் கேட்க வைத்தற்கு இலக்கியங்களில் அமைந்த சொல் 'அம்ம’ என்பது.

1 தொல் : சொல் : நூற்பா : 128