பக்கம்:புதையலும் பேழையும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1% புதையலும்

'உண்டால் அம்ம உலகம்' என்னும் புறப்பாட்டில், 'அம்ம’ வை அசைச் சொல்லாகக் காண்கின்றோம். இவ்வுரைப் பொருட் சொல்லாம் 'அம்ம தான் அம்மா என்பதன் மூலச்சொல்லாய் அமைகின்றது. 'அம்ம’ என்னும் சொல்லின் இறுதி நீண்டு 'அம்மா’ என்று ஆவதை ஆன்றோர் ஏற்றுக் கொண்டனர் என்பதைத் தொல்காப்பியம், .

'உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்'1 (வரையார் = நீக்கார்) எனத் தனியொரு செய்தியாகக் குறிக்கின்றது.

இவ்வாறு நீண்டு அம்மா உருப்பெற்ற சொல்லே விளிப்

பொருளைத் தருவதாயிற்று. அதற்கும் பின்வருமாறு இலக்கணம் அமைந்தது: x

'அம்ம என்னும் அசைச் சொல் நீட்டம்

அம்முறைப் பெயரொடு சிவணா தாயினும்

விளியொடு கொள்ப தெரியு மோரே'2 ... என்னும் நூற்பாவின் முதலடி 'அம்ம’, ‘அம்மா ஆவதைக் குறிக் கின்றது. அசைச் சொல் எல்லாம் இடைச்சொல். ‘அம்ம’ என்னும் இடைச் சொல் நீண்டு 'அம்மா' என ஆயினும், அஃது ஈன்றவள் எனப் பொருள்படும் முறைப் பெயர் ஆகாது என்பதை இரண்டாம் அடி குறிக்கின்றது. முறைப்பெயராகப் பொருள் பெறாதாயினும் ஆராய்ந்து அறிவோர் (தெரியுமோர்) விளிச் சொல்லாகக் கொள்வர் என்பதை இறுதி அடி தெளிவாக்குகின்றது.

இவ்விறுதி அடியின் "விளியொடு கொள்ப' என்பதற்கு நச்சினார்க்கினியர், 'அம்மா கொற்றா' எனச் சான்று காட்டி மற்றொரு விளிச் சொல்லோடு கொள்வர்” என்றார். இதனை அவரே சீவக சிந்தாமணி உரையிலும் காட்டி 'அம்மா விளியன்று' என்றார். ஆனால், தொல்காப்பியத்தின் முதல் உரையை வகுத் தமையால் உரையாசிரியர் என்ற தனிச் சிறப்புடன் அழைக்கப் பெற்ற இளம்பூரணர், இதுபோன்றே 'அம்மா சாத்தா' என்று சான்று காட்டி, W . . .

இடைச் சொல்லோடு தோன்றிட்டாயினும்

விளியாகக் கொள்வர் தொல்லோர்' ! -என்று குறித்து, அதனை விளக்குபவராய்,

1 தொல் : எழுத்து : 213. . 2 தொல் : சொல் : 1.50