பக்கம்:புதையலும் பேழையும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புேழையும் 15

குறித்துள்ளமை கொண்டும் பிறந்திருக்க வேண்டும்’ என்று குறித்துள்ளமை கொண்டும் அம்ம’ பற்றிய அறுதியான கருத்தைக் கூற அவர்கள் மனநிறைவு கொள்ளவில்லை என்பது புலனா கின்றது. ; :

இவ்வழியில் வேர்ச்சொல் கண்டு ஆராய்வது எடுத்துக் கொண்ட கருத்திற்கு அரண் அமைப்பதாகும். ஆயினும், அவ் வாய்வு சில அசைகளையும், பல சொற்களையும், அவற்றின் தொடர்பில் பல பொருள்களையும், பல நுணுக்கங்களையும் இயைபுபடுத்தும்,ஆய்வாய் விரிந்துசெல்லும். இவ்விரிவஞ்சி வேர்ச் சொல் ஆய்வை இதுபோது நிறுத்தி வைத்து 'அம்ம’ என்னும் சொல்லின் எழுத்துக்களை நோக்கும் ஆய்வை இவன் மேற் கொள்ள நேர்கின்றது. -

'அம்ம’ என்னும் சொல் அ + ம் + ம் + அ என நான்கு எழுத்துக்களின் கூட்டொலி. அகரத்தில் துவங்கி, மகரம் தொடர்ந்து, இரட்டித்து, அகரத்தில் முடிகின்றது. எழுத்துகள் நான்காயினும், ஒலியால் அகரமும் (அ) மகரமும் (ம்) ஆகிய இரண்டையே கொண்டது. இவ்விரண்டு எழுத்துகளின் இயல் பினைக் காண வேண்டும். -

அகரம்.

அகரம் தமிழில் மட்டுமன்றி அனைத்து மொழிகளிலும் தனிச்சிறப்புக் கொண்ட எழுத்து என்பதை அறிவோம். எழுத் தெல்லாம் அகர முதல’. மொழியியலார் அதனைக் கனத்தஎழுத்து’ என்பர். தமிழ்ப் பேரறிஞர் கா. சு, பிள்ளையவர்கள் அகரம் தமிழில் மாற்றம் அடைவதில்லை’ என்பதை விளக்கியுள்ளார்கள். அகரஒலி இல்லாமல் எந்த எழுத்து ஒலியும் இல்லை. அனைத்து எழுத்துகளிலும் ஒலியால் ஒன்றி நிற்பது அகரம். வரிவடிவிலும் அத்தகையதாகக் கொள்ள இடம் உண்டு. மொழிப்பொறி அறிஞர் பா. வே. மாணிக்க நாயக்கர் அவர்கள் 'அ' என்னும் வரிவடிவைப் பலவகையாகப் பகுத்துப் பகுத்தவற்றைப் பிரித்துப் பிரித்து இணைத்து, அவ்வொரு எழுத்தைக் கொண்டே'ஓம்', 'நமசிவாய' "சரவணபவ முதலிய மந்திர மொழிகளை உருவாக்கிக் காட்டினார்கள், மேலும், அகரம் பல சிறப்புகளைக் கொண்ட தாயினும் இவண் அது முதன்மை எழுத்து; மாற்றம் அற்றது; எங்கும் நிறையும் ஒலியையுடையது; எதையும் அ மைக் கும் வடிவினது' என்பனவற்றை நினைவுகூரலாம். . .