பக்கம்:புதையலும் பேழையும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 புதையலும்

மகரம்.

'ம்' என்னும் மகரம் மெல்லெழுத்து ஆறனுள் ஒன்று அதன் ஒலியை நுணுகி நோக்கினால் அவ் ஆறு மெல்லெழுத்துக் களுள்ளும் மகரம் மென்மையாவதை உணரலாம். தமிழ்ப் பண் முறையில் ஏழு இசையில் குரல் என்னும் இசை ஒன்றாகும். இதனைத் திரித்து வடமொழியில் மத்தியமம்' என்பர். ஒவ்வோர் இசைக்கும் ஒவ்வோர் உயிர்க் குறியீட்டெழுத்து, மெய்க்குறியீட் டெழுத்து உண்டு. குரல்’ என்னும் இசையின் மெய்க்குறியீட்டு எழுத்து மகர ஒற்றைக் கொண்டது. குரல் என்னும் இசைப்பெயர்ச் சொல்லில் மாந்தர் குரலின் பொருளும் இயைந்திருப்பதைக் காண் கின்றோம். மாந்தர் குரலிலும் மகளிர் குரல் இனிமையானது. அம் மகளிரது குரலின் பாங்கில் அமைந்ததால் பெயர் பெற்றதே குரல்" என்னும் இசை. இவ்வாறு மகளிர் குரல், அதன்கண் எழும் இனிமை ஆகிய இவற்றிற்கு அடிப்படையாக மகரம் ஒளிர்கின்றது. 'ஓம்' என்னும் மொழியில் ஒன்றி நின்று அதற்குக் கூறப்படும் இறைமை, தூய்மை, பயன்மை முதலியவற்றை நிறைவேற்றும் சிறப்புடையது மகரம். மேலும், மகரம், பல சிறப்புகளைக் கொண்ட தாயினும் இவண் அதன் மென்மை, இனிமை, தூய்மை என்பன வற்றை நினைவு கூரலாம். t

இவற்றிற்கெல்லாம் மேலாக, இவ்விரு எழுத்துகளது ஒலியும் எளிய முயற்சியால் தோன்றுவது குறிக்கத்தக்கதாகும். எழுத்துகளின் பிறப்பைக் கூறும் இலக்கணங்கள் இவ்வெளிய முயற்சியினைத் தெளிவுப்படுத்துகின்றன.

'முயற்சியுள், . அ, ஆ அங்காப்புடைய” அங்காப்பு என்ருல் வாயைத் திறத்தல். வாயை திறந்து கூறும் முயற்சி ஒன்ருல் அ, ஆ தோன்றும் என்பதே இவற்றின் பொருள். ஆகாரத்தின்ஒலியை அகரத்தைவிட நீட்டவேண்டி உள்ளமையால் அகரம் அதைவிட எளிமையில் தோன்றுவதாகின்றது. பிற உயிரெழுத்துக்களின் பிறப்புகளை ஒலித்து நோக்கினால், அகரம் ஒன்றே எளிய முயற்சியில் தோன்றுவதை அறியலாம். ;";2

مساس---- سما -------۳-سسس

1 தொல் : எழுத்து : 85 x 2. நன் ; 76