பக்கம்:புதையலும் பேழையும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 17

மகர ஒலி வாயின் மேல் உதடு கீழ் இதழுடன் கூடி நெகிழ் வதால் தோன்றும். இதற்கு இலக்கணம்,

'இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம்'

"மீகீழ் இதழ் உறப் பம்மப் (ப், ம்) பிறக்கும்”.

இரு உதடுகளும் கூடல் என்பது, வாய் இயல்பாக இருப்பதா லேயே அமைவதாகும். அவ்வாறு அமைந்திருக்கும் கூடலை நெகிழ்க்கும் ஒரே முயற்சியால் அங்காத்தலும் அமைந்துவிடுவதால் இவ்வெழுத்துகள் (ப், ம்) பிற மெய்யெழுத்துகள் யாவற்றினும் எளிய பிறப்பை உடையன என்பதை அறியலாம். உயிரெழுத்து களினும் அகர, ஆகாரம் நீங்கலாக ஏனைய எழுத்துக்களைவிட ப் ம் எளிய முயற்சியை உடையன என்பதை இலக்கணமும் ஒலி யெழுப்பும் கொண்டு உணரலாம். கூர்ந்து ஒலித்துக் காணின் மகர ஒலி முயற்சிக்கு இரு உதடுகளின் விளிம்புகள் ஒத்துப் பொருந்தி அமைந்திருப்பதைக் காணலாம். பகர ஒலி முயற்சிக்கு மேலுதட்டின் விளிம்பு உள்நோக்கிக் கீழ் உதட்டில் படியும். இதை நோக்கும்போது பகரத்தை விட மகரம் எளிய முயற்சியை உடை யது என்பதைக் காணலாம்.

அகரமும் மகரமும் எளிய முயற்சியால் ஒலிக்கும் எழுத் துகள் என்பது தெளிவு. இவ்வெளிய முயற்சியில் இவ்விரண்டு எழுத்துகளும் இயல்பாகவே அடுத்தடுத்து ஒலித்தற்குரியவை; ஒன்றையொன்று தொடர்ந்து தோன்றும் இயல்பும் இயைபும் கொண்டவை என்பனவே இவண் காணத்தக்கனவாகும்.

மேலும், அகரமும் மகரமும் மற்றொரு வகையிலும் தொடர்புடையவை. மெய்யுணர்வுத் துறையில் அகரத்தின் முதன்மையைக் கொண்டு சில மெய்மையை விளக்கும் மெய் யுணர்வுச் சான்றோர், மகரத்தையும் பொருத்தி இணைப்பர். தமிழ்க் கடவுள் எனச்சிறப்பொடு குறிக்கப்படும் முருகனது தன்மையைக் கந்த புராண ஆசிரியர் கச்சியப்பர்,

1 தொல் : எழுத்து : 97 2 நன் : 81 -

புே, 2