பக்கம்:புதையலும் பேழையும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும். 19

யின் முதற்படி என்னலாம். அடுத்த படி கரையும் ஒலியோடு உதடு களைச் சேர்த்துப் பின் திறந்து ஒலிப்பது. பழகிய தொண்டை யின் திறப்பால் அ? ஒலி தொடரும். மூடித் திறக்கின் 'ம்' ஒலி - ம ஒலி தோன்றும். தெளிவான உடல் வளமுள்ள குழந்தைக்கு இரண்டு திங்களிலேயே இவ்வொலி துவங்கும்-துலங்கும். அப் பருவத்திலேயே அம்ம அம்ம’ என்னும் ஒலிக்கூட்டல் கூடும் இப் 'கு'த்தில் குழந்தை, தாய் என அடையாளம் கண்டு கொள்ளும் நினைவினது ஆகும். ஆகவே, அதுபோது ஒலிக்கும் 'அம்ம’ ஒலி தாயை அழைக்கும் குறிப்பைக் கொண்டதாக அமைகின்றது. எனவே, அம்ம’ உருவாகும் போதே குழந்தை தான் உரைப் பதற்கு உரிய பொருளாகத் தாயைக் காண்கின்றது. அச்சொல் உரைப்பொருட் கிளவி ஆகிறது. இவ்வுரைப்பொருட் கிளவியாம் 'அம்ம’தான் குழந்தையின் உணர்வு வெளிப்படத் துணைநிற்கும் ஒலிக்கூட்டல் ஆகும். இதற்கு எழுத்துருவம் கொடுக்கலாம். "தாய்' என்னும் குறிப்புப் பொருளேயன்றி வேறொன்று கொள்வ தற்கு வழி இன்று. வெ ரிப்படையாகத் தாய்ப் பொருள் இன்றி உதட்டு அசைவால் உருவாகிய இக்கூட்டல் அசை யாகவும் அமைகின்றது. இவ்வமைப்புகளையே இலக்கண நூல்களாகிய தொல்காப்பியமும், நன்னூலும் 'அம்ம’ என்னும் சொல்லை 'உரைப்பொருட் கிளவி என்றும் உரை அசை' என்றும் விதித்தன.

குழந்தை, மாந்தனின் முதற் பருவம் -முதல் உரு. அது தரும் முதற்பொருளாம் அம்ம இயல்பில் தோன்றும் முதன்மொழி. இம் முதன்மொழியாம் அம்ம’ என்னும் ச்ொல் தாயை நோக்கிய உணர்ச்சி வெளிப்பாடாய்த் தோன்றியது. குறிப்பில் தன்யை உணர்த்துவது. இன்றும் மலைஞாலத்தார் ஈன்றாளை அம்ம’ என்றே அழைப்பதையும் காண்கின்றோம். மறைத்திரு போப் பெருமகனாரும் இதுகொண்டே குறித்தார் எனலாம்.

ஈன்றாள் முகங்கண்டு அவ்வுணர்வை அம்ம’ என்னும் ஒலிக்கூட்டலாக்கிய குழந்தை, ஈன்றவளை அழைக்க அம்ம’வை நீட்டி, அம்மா' ஆக்குவது இயல்பில் நிகழ்வதே. அவ் அம்மீr வின் ஈற்றொலி மா. அந்த 'மா' ஒலியே அழைக்கும் பொருட் குறிப்பைக் கொண்டது.

பிங்கல நிகண்டு,