பக்கம்:புதையலும் பேழையும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

%

o: புதையலும்

இவ்வாறாகப் பல்வகை உணர்வுகளை வடிக்கும் மூலமும் 'அம்மா’ என்னும் சொல் உலகில் பல்வகைஉண முதலும். களுக்கும் தாயாம் அன்னையை அன்பு உணர்வுடன் அழைக்கு ம் விளிச்சொல்லாக மிளிர்கின்றது."

வழக்காறு கொண்டும், வரலாறு கொண்டும் 'அம்மா'வை

1 என்றவளைக் குறிக்கும் பெயர்க் குறிப்பில் கண்டோ

2. ஈன்றவளை அழைக்கும் விளிப்பொருளில் கண்டோம்

3. உள்ளத்தில் எழும் உணர்வுக் குறிப்பில் கண்டோம்:

4. அன்புக்கு உரியாரை விளிக்கும் பெருளில் அமைவதை

iயும் கண்டோம்.

இவ்வாறு படிப்படியாய் வளர்ந்த வழக்காற்றைத் தொகுத்து" ஒர் இடத்தே காட்டத் திருத்தக்கதேவர் நினைந்தது போன்று சிந்தாமணிப் பாடல் ஒன்று விளங்குகின்றது. அதனை முன்னர் ஆங்காங்கு தனித்தனியே பிரித்துக் கண்டோம். தொகுத்துக் காண்போம்!

சிவகன் தோழர் அவன் தாய்க்குச் சீவகனது நிகழ்ச்சி களைக் குறிக்கின்றனர். செய்தி கேட்கும் ஆர்வத்தில் முழுச் செய்தியையும் வாங்குதற்கு முன் சீவகன் இறந்துவிட்டதாக விசயை கொண்டுவிடுகின்றாள். கொண்டு புலம்புகிறாள்:

கோஅம்மா ஆகிக் குடியோம்பி நின்குடைக்கீழ் பாவமே செய்தேன் பரிவெலாம் நீங்கினால் போ அம்மா என்றுரைப்பப் போவேன்முன்

- போயினாய், ஆ அம்மா அம்மா என் அம்மா அகன்றனையே' -என்பது பாடல்.

முதலில் தாய்ப்பொருளைக் காட்டுவதாகக் "கோ அம்மா ஆகி” என அமைத்தார். அடுத்த விளிப்பொருளை அடுத்துப் "போ அம்மா' என அமைத்தார், அடுத்து வளர்ந்த உணர்வுக் குறிப்பை 'ஆ அம்மா அம்மா’’ என அமைத்தார். அடுத்த அன்புக்

குரியாரை விளிக்கும் குறிப்பில் 'என் அம்ம்ா' என அமைத்தார்.

نسيوييعين بتمنيستجيبوتسمميسمهم جدجع

1. சி.சி.1804,