பக்கம்:புதையலும் பேழையும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈன்றவளாம் விசையை யைக் கொண்டே-அம்மாவைக் கொண்டே -'அம்மா'வை அமைத்தமை வியந்தும் நயந்தும் மகிழ்தற்குரிய அம்மாவின் இலக்கியம் இது.

இதன் மூலச்சொல்லாகிய 'அம்ம’ வை ஒற்றி உருவானது "அம்மை’ என்பதைக் காண்போம், ; : *

'அம்ம’ வின் இறுதி அ, ஆவாக நீண்டதே 'அம்மா எனத் தெளிந்தோம். அதையொட்டி நோக்கினால் 'அம்ம’ வின் இறுதி அ ஒலியுடன் 'ஐ' செறிந்ததே அம்மை. 'ஐ' என்னும் எழுத்து அ + ய் + இ என்னும் மூன்று ஒலிகளின் தொகுப் பொலி. (அய் இ-ஐ) குழந்தையின் உதடுகள் கூடி 'அம் ஒலியைக் கூட்டி, உதடுகள் நெகிழுங்கால் ஓரளவாய் உள் நோக்கி நெகிழ்ந்து, மேல்வாய்ப் பல்லில் பொருந்தியிருந்த நாக்கு அசைந்து, ஒரத்தை மட்டும் மேல் வாய்ப் பல்லில் பொருத்தி ஒலிப்பதால் ஐ தோன்றும். இதனை,

'அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய' -எனத் தொல்காப்பியம் வகுத்துள்ளது. 'அம்’ என்னும் ஒலித் தொடர்பில் 'ஐ' ஒலி உற அம்மை என்று ஒலிக்கும்.

இயல்பான இவ்வியக்கத்தால் 'அம்ம விண் தொடர்பாய் அம்மை தோன்றுவதைக் காணலாம். இந்த 'ஐ' யை இலக்கண நூலார் வினை முதல் இறுதி நிலை - கருத்தா விகுதி என்பர்.

தாயைக் குறிக்கும் அவ் அம்மையும் 'அம்மையோ என வியப்பு உணர்வைக் காட்ட நிற்கும்.

'அம்ம’ வின் பின்னொலி 'ஐ' ஆகியதோடு முன்னும் ஜ: கூடி மைம்மை’ என்றாகும். இந்த முன் "ஐ குற்றம் எனப் பொருள்படுதலாக அமைந்தது. பெண்ணின் குறை, தாய்த்தன்மை பெறாததாகும். இந்த மைம்மை’ என்ற சொல் தாய்த்தன்மை பெறாத மலடி என்னும் பொருளைத் தருவதாயிற்று.

மைம்மையே வந்தி யென்ப மலடிக்கு வகுத்த

- பேராம்? -என்பது சூடாமணி நிகண்டு.

1 தொல் : எழுத்து : 88 2 சூடா நி : மக்கள் : 68 8,