பக்கம்:புதையலும் பேழையும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் . 31

'துணைவனார்க்கு உற்ற துன்பம் . . " சொல்லிய தொடங்கி னானே' என்றார். புறாவின் துன்பத்தை நீக்கிய மாமன்னன் சிபியின் செய்தியை,

புறவின் அல்லல் சொல்லிய" . .

- -என்றார் ஆவூர் மூலங்கிழார்.

'பண்டைச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய"

-என்பது அவ்வைப் பெருமாட்டியின் தொடர்

களைகட்டளைச் சொல்லொடு இயைத்து முனைப்பாடியார் பேசுகின்றார். அறத்தைப் பயிராக உருவகிக்கும் அவர், இனிய சொல்லை விளைநிலமாக்கி, வன்சொல்லைக் களையாக்கி, உண்மைச் சொல்லை எரு ஆக்குகின்றார்.

'இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி”*

என்பது அவர்தம் பாட் டு

சொல் நிழலும், நெல் நிழலும்

நெற்கதிர் பல்லுயிர்களையும் உணவு தந்து ஒம்பிப் பசி என்னும் வெம்மை போக்கிப் பேணிச் சுவை என்னும் நிழல் தருவதால் நெற்கதிரை "அலகு உடை நீழல்' என்றார் திருவள்ளுவப் பெருந்தகை.

. . இதுபோன்றே, மக்களை ஒலி இனிமையால் ஒம்பிப் பேணிச் சோர்வு என்னும் வெம்மை போக்கி இனிமை என்னும் நிழல் தருவது சொல். இச் சொல்லின் பயனைக்கொண்டு சொல் நிழல்' என்றனர் கோவூர்கிழார், - -

சீவ, சி : 1148

புறத் : 89 : 1.

புறம் : 90 : 7 -

அறநெறி :16, -

"பலகுடை நீழலும் தங்குடைக்கீழ் காண்ப

அலகுடை நீழ லவர் - குறள் :1084,