பக்கம்:புதையலும் பேழையும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 38

செவியை நிலமாகவும், சொல்லை விதையாகவும், பயன் நிறைவேறுதலைப் பயிர்க் கதிராகவும் உருவகம் செய்தனர் புலவோர்.

"வள்ளல்களது செவிகளில் பொருள் விளங்கும் சொற்களை விதைத்துத் தாம் விரும்பிய பரிசைப் பெற்று நிறைவேற்றிக் கொள்ளும் உரம்பாய்ந்த நெஞ்சை யுடையோர் பரிசிலர்' -என்றார் அவ்வைப் பெருமாட்டியார். பெருஞ்சித்திரனாரும்,

'பொய் சொல்லுவதை அறியாத அறிஞனது செவி யிடத்து விதைத்த சொல்லாலான பாடல் பயிராக விளைந்தது'2 என்றார். - -

புலவன் உழவன் ஆகிறான்.

சொற்களை வழங்குதலை நெற்பயிர்த் தொழிலாகக் கண்டனர். கண்டோர், சொல்லை விளைக்கும் புலவனை உழவ னாகக் கண்டனர். திருவள்ளுவப் பெருந்தகை சொல் ஏர் உழவர்'3 -என்றார். சொல் ஏர் ஆகியது; புலவன் உழவன் ஆனான்.

இதற்குப் பொருத்தமாக அறிவை-புலனை ஏராக வைத்துப் புலன் உழுது உண்மார்' என்றார் கோவூர்கிழார்.

உழவுத் தொழில் ஓர் சொல்லாடல்.

இவற்றையெல்லாம் ஒரு சேர நோக்கி ஒரு காட்சி ஆக்கு கின்றார் கலித்தொகை ஆசிரியர்:

1 வள்ளியோர் செவி முதல் வயங்குமொழி வித்தித்தாம்

உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து வரிசைக்கு வருந்தம் இப் பரிசில் வாழ்க்கை' புறம் : 206 : 2-4

2 'பொய்த்தல் அறியா உரவோன் செவி முதல் -

வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' -புறம் : 287 : 4, 5. 3 'வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ள ற்க;

சொல்லேர் உழவர் பகை' --குறள் : 872. 4 'இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித் -

தமது பகுத்துண்ணும் தண்ணிமுல் வாழ்நர்." -புறம்:46:18, 4

பே, 3