பக்கம்:புதையலும் பேழையும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 35

கலித்தொகை ஆசிரியரின் வாய்மொழியை ஒன்று கூட்டிக்

காண் போம்:

'செதுமொழி சீத்த செவி செறுவாக முதுமொழி நீரா, புலன்நா உழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர்'

இப்பாடல் அமைந்த பகுதி மருதக்கவி. சொல் என்னும் நெல் விளையும் பாடல் மருதக் (மருதம் - வயல் பகுதியைக் குறிக்கும் பெயர்) கலியுள் அன்றி வேறெங்கு அமையும்?

இவ்வாறு நெல்லோடு சொல், தொடர்பாக ஒரிடத்தில் மட்டும் அமையின் அதனை நிறைவழக்காகக் கொள்ள இயலாது. பலர் உள்ளத்தும் இவ்வெண்ணம் அவ்வப்போது ஊறி நின்றதை இலக்கியங்களில் காணலாம். இவ்வகையில் இளங்கோவடிகளாரது பேச்சைக் கேட்போம்.

செங்குட்டுவன் கனக விசயரை வென்றான். வெற்றியைத் தமிழக மன்னர்க்கு அறிவிக்கச் செய்தான். சோழ பாண் டியர், ம் மாற்றம் சேரனுக்குச் சினத்தினை மூட்டியது. அங்கு அப்போது அமைந்திருந்த மாடலன் செங்குட்டுவனை அமைதிப்படுத்தி அறிவுரை புகல்கின்றான். இவ்விடத்தை வாய்ப்பாகக் கொண்டு இளங்கோவடிகளார் சொற்பயிரை விளைக்கின்றார் :

மாடல மறையோன் தன் மறை பயின்ற நாவால் செங்குட்டுவன் 'செவி என்னும் வயலை உழுதான் சிறந்த கருத்துகளை அவ்வயலில் விதைத்தான். விதைத்த, பதப் பட்ட சொற்கள் விளைவைத் தந்தன. அப்பதம் ஒன்று நூறாய் மிகுந்தது. விளைந்ததைச் சுவைத்து நுகரும் வேட்கை கொண்டான் செங்குட்டுவன்'2

1 'கவி : 88 : 3-5, 2 மறையோன் மறைநா உழுது வான் பொருள்

இறையோன் செவிசெறு வாக வித்தலின் விக்திய பெரும்பதம் விளைந்து பதம் மிகுத்து துய்த்தல் வேட்கையின் தழ்கழல் வேந்தன்' *: - - சிைலம்பு : நடுகல் : 187-190