பக்கம்:புதையலும் பேழையும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மேலே காணப்படும் மாடலன் வாய்வழியான இளங்கோவடி களார் பேச்சில் நாக்கு ஏராக உழுகின்றது. செவி வயலாகின்றது. பொருள் விதையாகின்றது. பயன் விளைவாகின்றது. வேட்கை உண்ணலாகின்றது.

சொற்பதம்.

இப்பாடலில் மற்றொன்றும் தென்படுகின்றது. அது பதம்' என்னும் சொல் தரும் குறிப்பாகும். பதம்’ என்றால் சொல்' என்றும் பொருள்; சோறு’ என்றும் பொருள். 'கூழ் பதம் புகா, சோறே' என்கிறது. பிங்கலம். சேந்தன் திவாகரமும் இப் பொருளை அறிவிக்கின்றது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்னும் பழமொழி, பதப்பட்டதால் சோறு பதம்’ எனப்படுவதை அறிவித்து நிற்கின்றது. இது போன்றே நற் பொருள் கூடிப் பதப்பட்ட சொல் பதம்’ எனப்படுகின்றது.

இவ்வாறு சொல் பலவகையிலும் நெல்லாய் வளர்ந்து பயிராகும் வரலாற்றின் படிகளில் ஏறுவோம்.

சொல் - நெல் செஞ்சொல் ۔------ செந்நெல் வன்சொல் - பதர்

சொல் - சொலி வன்சொல் - 565)6IT சொல் நிழல் w" ng கதிர் நிழல் சொல் عس--مسیۍ சோறு : சொன்றி சொல் - - வித்து சொல்லும் நாக்கு - உழும் ஏர் சொல்லாடல் *- உழவுத் தொழில் புலவர் _ உழவர்.

இப்படிகளில் ஏறுங்கால் படிப்படியாகத் தமிழ்ச் சொல்லின் உயர்வைக் காணலாம். நெல்லின் கோணத்தில் நின்று சொல்லைக் காணுங்கால் தோன்றும் சொல்லின் உயர்வை உளத்துக்கொண்டு இக்காலச் சொற்களின் வரலாற்றை ஆய்வது நற்பயன் தரும்.

1. பிங், தி : 1102 : 6. 2. 'சோறும் வழியும் சொல்லும் காலும் ஈரமும் சேமமும் புனலும் காலையும் பாவலர் பதம்எனப் புகரும் கிளவி'

-சேந், சி. : ஒரு சொற் பல்பொருள்.