பக்கம்:புதையலும் பேழையும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 புதையலும்

கொய்ததோ கொய்யவில்லையோ என்று காணும் இமை நேரத்தில் மற்றொரு கணை பாய்ந்து முளைத்த தலையை அறுத்தது” ! அதே விரைவில் அடுத்து ஒரு தலை முளைத்தது.

அறுத்த கணை நீலக்குன்றாம் இராமனுடையது.

முளைத்த தலைகள் கருமலையாம் இராவணனுடையன.

இவ்வாறு தொடர்ந்து அறுக்க முளைக்க, அறுக்க முளைக்க ஒய்வில்லாமல் தலைகள் நூற்றுக்கணக்கில் போய்விழுந்தன. அப் போர்க்களத்தில், பார்த்த இடமெல்லாம் பல தலைகள் வீழ்ந்தன.

இத்தலைகள் கம்பராமாயணத்தில் முளைத்த தலைகள்.

கம்பராமாயணத்தில் முளைத்தால் கந்தபுராணத்தில் முளைக்க வேண்டாவோ? முளைத்தன. பத்து தலைகளைப் பெற்ற இராவணனுக்கு நூறு தலைகள் முளைத்தன என்றால், ஆயிரம் தலைகளைப் பெற்ற சிங்கமுகாசுரனுக்குப் பல்லாயிரக் கணக்கில் முளைக்கவேண்டும் அன்றோ? முளைத்தன. முளைத்த தலைகளும் முழங்கி ப்பேசின :

முருகனே. நீ எத்துணை காலந்தான் ஊடுரு வும் அம்பை எய்து கிளைத்து முளைக்கும் தலை களை அறுத்தாலும் மேலும் மேலும் முளைக்கு மேயன்றி முடிவுறா ?

- என்று சிங்காமுகாசுரன் தலை வீரம் பேசிற்று.

1 கொய்தது கொப்தில தென்னும் கொள்கையில்

எய்த அக்கணத் தெழுந்தது ஓர் சிரம்:

- கம்ப.: இராவணன்

வதை; 153, 2 உளைக் குங் கணைதள் ளியுகம் பலநீ கிளைக் தந் தலைமொய்ம் புகெடுத் திடினும் முளைக்கின் நதலால் முடிவுற் றிடுமே, இளைக்கின் றனை நீ கொல்லெனைப் பொருவாய் - க. 4 : சிங்கமுக

சுரன் : 427,