பக்கம்:புதையலும் பேழையும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 புதையலும்

சொல் உடல்; பொருள் உயிர்.

உடலில் உயிர் இயங்குவதை இருவகையாக அறியலாம். மூச்சு ஒட்டத்தாலும், நாடித் துடிப்பாலும் வெளிப்படையாக அறிகின்றோம். உடலின் இயக்கத்தாலும், மன உணர்வாலும் குறிப்பாக உணர்கின்றோம்.

சொல் பொருளைத் தெரிவிக்குங்கால் இருவகை யாகத் தெரிவிக்கும். பொருளை வெளிப்படையாகத் தெரிவிக்கும்; பொருள் குறிப்பாகத் தோன்றுமாறு நிற்கும்'

-என விளக்கியது தொல்காப்பியம். எனவே, உயிரைப் போன்றது சொல்லின் பொருள் என்றதற்கே ற்ப பொருள் சொல்லில் வெளிப்படையாகவும் தோன்றும்; குறிப் பாகவும் தோன்றும்.

சொல்லின் இவ்வியல்புகள் வளம் வாய்ந்த மொழிகள் பலவற்றிற்கும் பொருந்தக்கூடியனவே.

தமிழ்ச்சொல், பொருள் உணர்த்துவதைப் பரவலாகக் காணலாம்; பல துறைகளில் நோக்கலாம்; பல போக்குகளில் அறியலாம்; பல பாங்குகளில் உணரலாம்.

தமிழில் ஒரு சொல்லே பல பொருள்களைத் தரும். ஒரு சொல்லுக்கே பல சொற்கள் உள. இவை திரிசொல் எனப்படும். இத்திரி சொல்லிலும். பெயர்ச்சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச்சொல் எனச் சொற்கள் பல்கிப் பெருகும். இத்திரி சொல் மொழி வளப்பத்தைக் காட்டுவது.

மொழிக்கு வளப்பத்தோடு வனப்பையும் ஊட்டும் Jಾಗಿ6ನು குறிப்பாகப் பொருள்களும் சொற்களும் பங்கு கொள்கின்றன. அவற்றுள், ஆகுபெயர் ஒன்று.

தலைக்கு ஒரு மாங்கனி கொடு’, என்றால் மாங்கனியைத் தலையில் வைப்பான் இலன். தலையைப் பெற்ற மனிதனுக்கே கொடுப்பான். இவ்விடத்தில் "தலை என்னுஞ் சொல் தன் வெளிப்படைப் பொருளை உணர்த்தாமல், தன்னோடு தொடர்

l தெரியுவேறு நிலையலும் குறிப்பில் தோன்றலும்

இருபாற் றென்ப பொருண்மை நிலையே! -தொல் சொல் : 153.