பக்கம்:புதையலும் பேழையும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 புதையலும்

'முதலில் தோன்றியது' என்னும் இயைபில் புல்லின் முளைக்குத் 'தலை’ என்னும் சொல் ஆகி வந்துள்ளது.

முதன் முதலில் தலை’ என்னும் சொல் உறுப்பு’ என்னும் நேர் பொருளில் அமைந்தது. அடுத்துக் குறிப்புப் பொருளாய் "முளை' என்னும் பொருள் முளைத்தது. முளைத்த பொருள் கிளை விடாமலோ போகும்? கிளைகளைக் காண்போம் :

மூன்றாவதாகத் தலை’ என்னுஞ் சொல் தலை - சிறந்த அமைந்துள்ள குறள்:

அறம் தென்புலந்தார் தெய்வம் விருந்

- தொக்கல் தான் என்றாங் கைம்புலத்தா றோம்பல் தலை” (48) - என்பது. ஒம்பல் தலை’ என்பதற்குப் பாதுகாத்தல் சிறந்த அறம்' என்பது பொருள். இவ் விடத்தில் தலை என்னுங் சொல்லுக்குச் "சிறந்த அறம்' என்னும் பொருள் அமைகிறது. இப்பொருள் தலையோடு மிக நெருங்கிய தொடர்புடையதாவதைக் காணலாம் :

உறுப்புகளிற் சிறந்தது தலை. ஐந்து பொறிகளும் தலை லேயே அமைந்துள்ளன. அப்பொறிகளை இயக்குவதற்குரிய தலைக்கயிற்றைச் சுண்டிக் கொண்டிருக்கும் மூளையும் தலை யிலேயே உள்ளது. இவற்றால் தலை சிறந்ததாகின்றது. ஐம்பொறி களையும் சென்ற இடத்தில் செல்லவிடாது, தீது நீக்கி, அறத்தின் பால் இயக்குவதுமூளை;கோளுடையபொறிகளைக்குணம் உள்ளன வாக்கித் தலை சிறந்த அறத்தினைச் செய்ய வைக்கின்றது. சிறந்த உறுப்பாம் தலை செய்யும் அறம் சிறந்த அறமாக அன்றோ அமை யும்? இச்செயலைக்கொண்டு தலை’ என்னுஞ் சொல்லுக்குச் 'சிறந்த அறம்' என்னும் பொருள் பொருந்துகின்றது. -

இக்குறளை மேலும் ஒருகால் நோக்கின் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் எனப் பட்டியல் இடப்பட்டுள்ள ஐந்தும் ஐந்து பொறிகளுக்கேற்ப அமைந்துள்ளமை காணலாம். ஐந்து புலம் என, ‘புலம்' என்னும் சொல்புலன்களை நினைவூட்டு கின்றது. ஐம்பொறிகளும் வழுவாது காத்தல் என்பதற்கு ஏற்பக் 'காத்தல்' என்னும் பொருள்தரும் “ஓம்பல்' என்னுஞ்சொல் அமைந் துள்ளது. இவ்வியைபுகள் நினைந்து சுவைத்தற்குரிய நயங் கொண்டவை, w