பக்கம்:புதையலும் பேழையும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 . புதையலும்

வன்மையுள் எல்லாந் தலை” (444); "பொறுத்தாற்றும் பண்பே தலை' (579); கழிநல் குரவே தலை” (657); "நாடென்ப நாட்டின் தலை" (736); "வெறுக்கையுள் எல்லாம் தலை" (761); :தமரின் தனிமை தலை” (814); "இன்னா செய்யாமை தலை' (852): போற்றலுள் எல்லாம் தலை” (891); "உழந்தும் உழவே தலை’ (1031).)

'சிறந்த அறம்', மேம்பட்டவன்', 'சிறந்தது என மேலே அமைந்த பொருள்கள் மூன்றும் ஒத்த பொருள் போன்று தோன்றினும், ஒரளவு வேறுபாடு உடையனவே. அவ்வேறுபாடு 'தலை என்னுஞ்சொல் சேர்ந்துள்ள தொடர்களால் அமைந்தது. ஆயினும், சிறந்த அறம்' என்பது செயலைக் குறிப்பது. மேம் பட்டவன்’ என்பது செயலால் உயர்ந்தவனைக் குறிப்பது. ‘சிறந்தது’ என்பது பொதுவில் சிறந்த பண்பை - தன்மையை - பொருளைக் குறிப்பதாகின்றது. இவை, தம்முள் சிறு வேறு பாடு உடையனவாக அமைகின்றன.

இதுவரை தனிமொழியாக நின்று பொருட் தலையொடு கிளை விட்ட தலை, இதற்குமேல் புணர்மொழி படு யில் அமைந்து பொருட்கிளை விடுகின்றது. முன்னே அடைமொழி பெற்றும், பின்னே வினைச்சொல் பெற்றும் பல பொருள்களைப் பெருக்குவதைக் காணலாம்.

'படு' என்னும் முதனிலை கொண்ட வினைச்சொல்லைப் பின்னே இணைத்ததாய்த் தலை" என்னுஞ்சொல் அடுத்து வருகிறது. -

"பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர், விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்” (88)

-இக்குறளில் தலைப்படாதார் என்பதற்கு முற்படாதார்’ என்பது பொருள். தலைப்படல், முற்படல் என்னும் பொருளை உடையது. தலை, முன் தோன்றியது என்னும் இயைபில் "படல்'