பக்கம்:புதையலும் பேழையும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 . புதையலும்

ருந்து பிறவற்றிற்கு ஆணையிட்டு நெறிப்படுத்துவது. எனவே, 'தலைமைத் தன்மை வாய்ந்த தலைவர்' என்னும் பொருளோடு இயைகிறது.

இறுதியாக, 必 ஒரு தலையும் தலை என்னும் சொல் அமைந்த குறளாக, இரு தலையும் "ஒருதலையான் இன்னாது காழ்

காப்போல

இருதலை யானும் இனிது’ (1198)

- என்னும் குறள் அமை கின்றது. இதன் கண் ஒரு தலை, இருதலை என்பவற்றில் அமைந்த ஒன்று, இாண்டு, என்பன எண்ணுப் பொருளிலேயே உள்ளன. தலை ஆகுபெயராய்த் தலையை உடையாரை உணர்த் தும் தொடர்போடு எண்ணுப்பெயர் கூடி, சார்பு - பக்கம் என்று பொருள்பட்டு நிற்கின்றது. எனவே, ஒருதலை ஒருபக்கம்; இருதலை + இருபக்கம் எனப்பொருள்கள் கிளைக்கின்றன.

இடையே,

தலையம்ைந்த ஒரு குறளைத் தாண்டிவர நேர்ந்தது.

"செறுநரைக் காணின் சுமக்க: இறுவரை காணின் கிழக்காம் தலை” (488)

என்னும் குறளே அது. இதில் அமைந்த தலை உறுப்பைக் குறிப்பதாய் நின்று கிழக்காம்' என்னும் சொல்லோடு தொடர்வ தால் இரு சொற்களாகவே நின்று வேறு பொருள் குறிக்கின்றது. "பகைவர்க்கு இறுதிவரும் வரை பணிக இறு தி எல்லையில் பகைவர் கவிழ்வர்-என்பது இக்குறளின் கருத்தாம். கிழக்காம் தலை’ என்னும் தொடர் தலைகீழாம் - தலைகவிழ்ந்து அழிவர்" என்னும் பொருள் தருவதாகின்றது. இருசொற்களையும் இணைத்து ஒரே பொருளாகக் கொள்ளின் கவிழ்வர் என்னும் பொருள் கிளைக்கின்றது. இங்கே தலை உறுப்பையும் சுட்டு வதாய்ப் பின்னர் தொடரால் வேறு பொருளைக் கிளைக்கச் செய் வதால் தனித்துக் காண வேண்டியதாயிற்று. இஃதே இக்குறளைத் தாண்டி வரக் காரணமாயிற்று. .

தலை கவிழ்வு