பக்கம்:புதையலும் பேழையும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதுவரை,

ஒரு தலையிலிருந்து பல த ைலக ள் முளைக்கக் கண்டோம். அத்தலைகளைப் பொருள்களுடன் பட்டியலிட்டுக் காணலாம்:

தலை - தலை (உறுப்பு)

தலை - முளை

தலை - சிறந்த அறம்

தலை - மேம்பட்டவன்

தலை - சிறந்தது

தலைப்படல் - முற்படல்-எய்தல் தலைப்பிரியா - எந்த நிலையினும் நீங்காத ஒருதலை - திண்ணிது தலைக்கூடி - இயைபோடு சேர்ந்து தலைப்பெய்து - இயைபின்றிச் சேர்ந்து தலைச்செல்லா - தொடராத

தலைவந்த - எதிர்ந்த

தலைமக்கள் - தலைவர்

ஒருதலை;

இருதலை. - ஒரு பக்கம்; இருபக்கம். கிழக்காம் தலை - கவிழ்வர் (கவிழும்)

இவ்வாறு திருக்குறளில் 'தலை’ என்னும் சொல் 15 பொருட்கிளைகளை விடுகின்றது. தலையில் முளைக்கும் தலை களைக் கண்டு வியக்கின்ருேம்.

திருவள்ளுவப் பெருந்தகை தலையிலே முளைக்க வைத் திருக்கும் தலைகள் மொழியியலாய் நம்முடன் பேசி நம்மை மகிழ்விக்கின்றன. மேற்காட்டப்பட்டுள்ள பட்டியலின் சொற்கள் அமைந்த குறட்பாக்கள் திருக்குறளில் படிப்படியாக வரிசையில் வளர்ந்து வந்துள்ளதை அவ்வற்றின் எண்களை மீண்டும் நோக்கினால் வியப்பு பிறக்கிறது. படிப்படியாகப் பொருள் கிளைத்துத் தழைக்கின்றமையைக் கூர்ந்து நோக்கும்போது வியப்பு நிலைக்கின்றது. இதுபோன்று மேலும் பொருட்கிளை