பக்கம்:புதையலும் பேழையும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 புதையலும்

"சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் (இராமாநுசர்)

தம்பிறப்பால் நாற்றிசையும் கொண்டாடும் நாள்'

-என்று நாலாபக்கத்திலும் கொண்டாடப்பட்டதைச் சாற்றினார். இது போன்றே சைவ அடியார் யாவர்க்கும் பிறந்த விண்மீனில் விழா எடுக்கின்றனர்.

இக் காலத் தி ல் அண்ணல் காந்தியடிகள், அறிஞர் பெருந்தகை அண்ணா முதலியோர் நினைவாக அவரவர்தம் பிறந்த நாள்கள் பொதுவிழாவாகக் கொண்டாடப்படுகின்றன. இவையெல்லாம் இறந்த சான்றோர் நினைவாகவும், கடவுள் அருள் பெறும் நோக்கமாகவும் கொண்டாடப்படுபவை. இவை யன்றித் தனித்தனியாக ஒவ்வொருவர்க்கும் இல்லந்தோறும் - குடும்பந்தோறும் பிறந்த நாள் விழாக்கள் கடைப் பிடிக்கப் படுவதாகக் காண இயலவில்லை,

கிறித்துவ மதத்தார் ஏசுபெருமான் பிறந்த நாளை "கிறித்துமசு என்று ஆண்டுதோறும் கொண்டாடத் துவங்கினர். அப்பழக்கத்தை கிறித்துவத்தார் விரிவுபடுத்தித் தேனி, ஒவ்வொரு வருக்கும் பிறந்த நாளை இல்ல விழாவாகக் கொண்டாடத் தொடங்கினர்.

முகமதிய மதத்தாரும் நபிபெருமான் பிறந்த நாளை 'மீலாது நபி' எனக் கொண்டாடுவர். ஆயினும், அன்னார்

தத்தமக்குரிய பிறந்த நாளை இல்ல விழாவாகக் கொண்டாட வில்லை,

உருவும் கருவும்.

தமிழ் மக்கள் பிறந்த நாளைத் தம் வாழ்வியலில் பெரு நாளாகக் கொண்டனர். அக்கொண்டாட்டம் தனி மாந்தர்க்கு இல்ல விழாவாகவும், மன்னன், சான்றோர் முதலிய தலை மக்கட்குப் பெருந்திருவிழாவாகவும் அமைந்திருந்தது. ஆனால், தனி மாந்தனுக்குக் கொண்டாடும் மரபைக் காலப்போக்கில் கை கழுவிவிட்டனர்.

1 உபதேச ரத்தின மாலை,