பக்கம்:புதையலும் பேழையும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 புதையலும்

தமிழ்நாட்டுக் கரு.

எவ்வாறு?

தமிழ்நாட்டுப் பிறந்த தாள் மரபு நீண்டபெரும்வரலாற்றைக் கொண்டது, அவ்வரலாற்றின் துவக்கம் நமக்குக் கிடைக்கின்ற அளவில் ஏறத்தாழ 5000 ஆண்டுகட்கு முற்பட்டது என்று கூறலாம்.

'பிறந்த நாள் பெருமங்கல நாள் எனப் படும். பிறந்த நாள் வருங்காலம் போர் நிகழுங் காலமானால் மன்னர் போருக்குரிய சினத்தை நீக்கிப்போரைநிறுத்தச்செய்வர். மக்களுக்கு வரி நீக்கம் செய்து ஈகை புரிந்து அறஞ் செய்வர். வெண்ணிறப் புத்தாடை உடுத்திப் பல்லோர் வாழ்த்தப் பெருமங்கலம் பெறுவர் ? -

- இவ்வாறு தொல்காப்பியம் பிறந்த நாளுக்கு இலக்கணம் வகுத்துள்ளது. தொல்காப்பியம் அதன்

சொல்லாட்சியாலும் மொழிநடையாலும் கி மு. 3000 ஆண்டுகட்கு முற்பட்டது என்று கணிக்கப்படுகின்றது. -

அதற்கு முன்னர் எத்துணையோ பல நூறு ஆண்டுகளின் மரபுகளே இலக்கணம் பெற்றிருக்கும். எனவே, இலக்கணம் பெற்றுள்ள பிறந்த நாள் அதற்கும் மிகத் தொன்மையானது என்று உணரலாம்.

தொடர்ந்து தோன்றிய இலக்கண நூல்களும் இலக்கியங் களும் பிறந்தநாளின் வரையறைகளையும் நடப்புகளையும் விளக்கு கின்றன. பின்னர் ஐயனாரிதனாரால் எழுதப்பட்ட புறப்பொருள் வெண்பா மாலையிலும் பிறந்தநாள் இலக்கணம் உளது.2 இதனால் இம்மரபு இந்நூலின் காலத்திலும் வழக்கிலிருந்ததை அறிவிப்பதாகும். - . .

1 'சிறந்த நாளணி செற்றம் நீக்கிப்

பிறற்த நதாள்வயின் பெருமங் கலமும் -தொல் : பொருள் : 91.

2 அறந் தரு செங்கோல் அருள் வெய்யோன் -

பிறந்தநாள் சிறப்பு உரைத்தன்று' , -பு. வெ. மா: பாடான், 23,