பக்கம்:புதையலும் பேழையும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 67

இவ்வாறு பெருமங்கலம், பெருநாள், நாண்மங்கலம் வெள்ளணி நாள் எனப் பெயர்களைப் பெற்றுப் பிறந்த நாள் தமிழ் நூல்களில் சிறப்பான இடம் பெற்றுள்ளது.

இலக்கியம்

பிறந்த நாட் கொண்டாட்டம் சிறப்பாக மன்னர்க்கெனத் தொடங்கிப் பொதுவாகத் தலைமக்கட்கெனத் தொடர்ந்து, நன் மக்கட்க்கும் வளர்ந்தது. இவற்றால் பிறந்த நாள் பற்றிய செய்திகளும் வழக்குகளும் பெருகின. அஃது ஒரு தனிப்பொரு ளாக இலக்கியம் பெறும் அளவில் பெருகியது. பிறந்த நாளுக் கெனத் தனி இலக்கியம் படைக்கப்பட்டது.

பிற்காலத்தில் எழுந்த சிறுசிறு இலக்கியங்கள் சிற்றிலக்கியங் கள் (பிரபந்தங்கள்) எனப்படும். அவை 96 வகைகளாகப் பகுக்கப் பெற்றன. அவற்றுள் பெருமங்கலம்’ என்பது ஒருவகை இலக்கியமாயிற்று. இது முழுதும் பிறந்த நாள் கருத்துகளையே கொண்டது. பிறந்த நாட் சிறப்பு கருதி எழுந்த தனி இலக்கியம் இது.

விண்மீனாற் பெயர்.

பிறந்த நாள் விண்மீனின் பெயரால் குறிக்கப்படுவது முன்னரே குறிக்கப்பட்டது. பிறந்தவரும் தம் விண்மீன் பெயரால் அழைக்கப்பெறுவதும் வழக்காயிற்று.

"உத்திரட்டாதியான், பரணியான், ஆதிரையான்’ என் றெல்லாம் இலக்கண நூல்களில் காலப்பெயர்கட்குச் சான்றாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவை மாந்தர் தாம் பிறந்த விண்மீனாற் பெயர் பெற்றனர் என்பதை அறிவிக்கும் ஒருவகைச் சான்றுகள்.

இவைபோன்றே பெயர் பெற்ற புலவர்களைச் சங்க இலக்கியங்களில் காண்கின்றோம். மூல விண்மீனிற் பிறந்தவர் மூலம் + கிழார் = மூலங்கிழார் எனப்பெயரிடப் பெற்றார். ஆவூர் முலங்கிழார், ஐயூர் மூலங்கிழார்' என இருவர் புறநானூற்றில் விளங்குகின்றனர். இடைக்காலத்தில் திருமந்திரத்தை இயற்றிய சைவப் பெரியார் மூல விண்மீனிற் பிறந்தவராதலால் 'திருமூலர்' எனப்பட்டார்.