பக்கம்:புதையலும் பேழையும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறந்த நாள் ஒரு சமுதாயப் பழக்கம் பற்றிய ஆய்வு வள்ளுவர் வாழ்விடம் வரலாற்றுப் பின்னணி கொண்டது. 'குட்டுவன் எடுத்த கோட்டமும் அத் தகையதே. மருந்தில் மலர்ந்த இலக்கியம் ஒரு மருத்துவ ஆய்வு. முடிச்சவிழ்க்கும் சொல் ஒரு முடிச்சை மட்டும் அவிழ்க்கவில்லை; பல முடிச்சு களை அவிழ்க்க உதவுகிறது.

- பண்டைத் தமிழர் கப்பல் கட்டுதல், கடற் செலவு, வேளாண்மைப் பாசனக் கட்டிடங்கள், நகரமைப்பு மனை, மாளிகை அமைத்தல் ஆகிய துறைகளில் அன்றையப் பின்னணியில் நோக்கும் பொழுது, மற்ற இனங்களிலும் உயர்ந்த நிலையினை அடைந்திருந்தனர். அதற்கான தடயங்களை நாம் இதுவரை முயன்று தேடவில்லை. மண்ணில் மறைந்த வற்றை நாம் தோண்டவில்லை. கடலில் அமிழ்ந்த வற்றை நாம் ஆழ்ந்து மூழ்கிக் காணவில்லை. நமக் கிருப்பது பெரும்பாலும் இலக்கியச் சான்றுதான். இலக்கியத் துணை கொண்டு, எழுநிலை மாடம் என்ற ஒரு கட்டிட வகையை ஆசிரியர் ஆழ்ந்து ஆய்ந்து எழுதியிருக்கிறார். எழுநிலை மாடம்' ஓர் எடுத்துக்காட்டு. இத்துறையில் அறிஞர்கள் ஆய்வுக்கு வாய்ப்புகள் நிறைய உள்ளன. புலவர் கோவை. இளஞ்சேரன் அவர்களது இக்கட்டுரை இதற்கு ஒரு தொடக்கமாக அமைய வேண்டும்.

நமது பண்டைய வரலாற்றுக்கு இலக்கியம் ஓரளவு சான்று பகர்கிறது என்று கூறினேன். இலக்கியம் கற்பனையும், கதையும் நிறைந்தது. எனவே, அதில் வரலாற்று உண்மை தேடும் பொழுது எச்சரிக்கை தேவை. இதை மறுப்பதற்