பக்கம்:புதையலும் பேழையும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் : 71

கோவில்களில் வழிபாட்டுக்குமட்டுமன்றிப்பொதுமக்கள் நலனுக்கும் அறக்கட்டளைகளை நிறுவினாள். இவ்வாறு பிறந்தநாளால் போர் நிறுத்தம், சிறைவீடு, பொதுமக்கள் விழா, பரிசுகள் விருது கள் வழங்கல், இல்லத் துாய்மை, அறக்கட்டளை, அறங்கள் முதலிய பல்வகை நன்மைகள் விளைந்தன.

விண்மீன் வாழ்த்து.

மன்னரையோ மற்றவரையோ நெடுநாள் வாழ்க’ என்று வாழ்த்துவோர் பல முறைகளைக் கொள்வர். அவற்றுள் ஒன்று 'பிறந்த நாள் விண்மீன் நிலைத்திருப்பதாக” என்றுபிறந்தநாளுக் குரிய விண்மீனை வாழ்த்துவது. *

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை வாழ்த்தும் மாங்குடிகிழார்,

“நின்று நிலைஇயர் நின் நாண்மீன்' .

- என்று அவன் பிறந்த வின் மீனையே வாழ்த்தினார். இவ்வகை வாழ்த்துக்கும் பிறந்த நாள் பயன்பட்டது.

இன்னின்ன விண்மீன்களில் பிறந்தால் இன்னின்ன நன்மை கள் விளையும் என்றொரு நம்பிக்கை இருந்தது. இன்றும் சில பழ மொழிகள் அதனை அறிவிக்கின்றன.

'பரணியில் பிறந்தவன் தரணி ஆள்வான்' அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப்

பானையெல்லாம் தனம்' கேட்டையிற் பிறந்தால் கோட்டையைப் பிடிப்பான்'

- - எனப் பல வழங்கு கின்றன. இவையெல்லாம் வாய்ப்புகளேயன்றி வாய்த்தவைகள் அல்ல?

1 ບຸກທໍ່ 24 24,