பக்கம்:புதையலும் பேழையும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 鴨

நாளில் மருந்தைக் கொள்ளக் கூடாது என்றும், சில மருந்துகள் தீமையையே தந்துவிடும் என்றும் விதிக்கின்றன. இதற்குத் திருத் தக்க தேவர் காட்டும் கதை நிகழ்ச்சி ஒன்று காட்டத்தகுந்தது.

சீவகன் கதையில் பதுமாவதி என்றொரு அரச குமாரி அவளைப் பூஞ்சோலையில் நச்சுப் பாம்பொன்று திண்டிவிட்டது "மருத்துவ ஏற்பாட்டிற்குமுன் அரண்மனைக் கணி வந்தான். நாளும் கோளும் பார்த்து நன்மை தீமையைக் கணித்துச் சொல்லும் அவன்,

'இராகு என்னும் பாம்புக் கோள் நிற்கும்போது பாம்பு கடித்தால் எவராலும் - கடவுளாலும் ஒன்றும் செய்ய முடியாது. இவளுக்கு அந்நிலையில் கடிக்க வில்லை. அதனால் இறப்பு நேராது. அத்துடன் இன்று இவளுக்குப் பிறந்த நாளும் அன்று. அச்சப் பட வேண்டியதில்லை -என்றான். இக்கருத்தும் நோய் கொண்டார்க்குப் பிறந்த நாள் தீங்கானது என்பதை அறிவிக்கின்றது.

பாம்பெழப் (இராகு தோன்ற) பாம்பு கொண்டால்

பகவற்கு மரிது தீர்த்தல்; * . . தேம்பிழி கோதைக் கின்று (இல்லை)

பிறந்த நாள்” -சீவ. சி . 1280

. இவ்வாறெல்லாம் காணப்பட்ட கருத்துகளைத் தொகுத்தால் பிறந்த நாள், - .

5000 ஆண்டுகளுக்கு முன் கருக்கொண்டு, மாந்தரது வாழ்வில் விழாவாக நின்று, இலக்கியத்தில் இசை பெற்று, இலக்கணத்தில் இயைந்து, மங்கலத்தில் மலிந்து,

விண்மீனில் விளங்கி,

இல்லத்தை அழகுபடுத்தி,