பக்கம்:புதையலும் பேழையும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலப் பின்னணி,

மேலும் நிலைக்கும்.

திருவள்ளுவர் இரண்டாயிரத்தின் நினைவாகச் சென்னை நகரில் கலைக்கோவில் எழுப்ப அந் நாள் முதல்வர் டாக்டர் கலைஞர் முனைந்தார்.

மயிலாப்பூரிலுள்ள திருவள்ளுவர் கோவிற் பகுதி யில் அதனை அமைக்கும் கருத்து ஆயப்பட்டது.

அதுபோது மயிலாப்பூரில் அமைப்பதற்கு அப் பகுதி 'திருவள்ளுவர் வாழ்ந்த பகுதி என ஒரு காரணங் கூறப்பட்டது சிலரால்.

'வாழ்ந்த இடம் மயிலாப்பூர் அன்று -எனத் தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் பலரும் (எளியேனும்) கூறினம். இந்நிலையில் மயிலை இல்லையெனில் எவ்விடம்?’ எனும் வினா எழுந்தது.

அதற்கென எழுந்த ஆழமான நினைவால் ஆயப் பட்டு முளைத்தது.

"வள்ளுவர் வாழ்விடம்’

இதனை வெளியிட்ட சீரணி ஆசிரியர் இனிய நண்பர் திரு சிலம்பொலி செல்லப்பனார் "இக்கட்டுரைக் கருத்திற்கு - ஒத்த மாறுபட்ட ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன எனும் குறிப்பொன்றையும் அறிவித்தார்.

அவ்வாறு இனித்தான் வரவேண்டும். அதுவரை இம்முடிபு நிற்கும். அதற்குமேலும் நிலைக்கலாம்.

மறுவெளியீடு . வெளியீடு : 'தமிழ் நேசன்' சிரணி' நாளிதழ், கோலாலம்பூர், தமிழ்நாட்டரசிதழ்,சென்னை, தி. ஆ. 2002-வைகாசி-17, -- தி. ஆ. 2000-தை-1

1 —5–1970; - 44-1969 س-1 س