பக்கம்:புதையலும் பேழையும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 - புதையலும்

பொருள்கள், பண்டை இலக்கண இலக்கியக் குறிப்புகள், கல் வெட்டுகள், தக்க இயைபான செவிவழிச் செய்திகள் முதலியவை புறச்சான்றுகளாகத் துணை நிற்பவை. ஆசிரியரது நூலுள் கிடைக்கும் அகச்சான்றுகளே வலிமை தருபவை.

வள்ளுவப் பெருந்தகையரது வாழ்விடத்தை அறியத் துணைக்கு வரும் புறச்சான்றுகள் யாவை? அவை எவ்வளவில் முடிவுகளுக்கு வலிமையூட்டிஈடுகொடுக்கின்றன? -எனக் காணலாம்.

திருவள்ளுவர் வழங்கிய திருக்குறளைப் போற்றிப் பாராட்டும் வெண்பாக்கள் உள்ளன. வெவ்வேறு புலவரால் பாடப்பட்ட தாகச் சொல்லப்படும். ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வொரு மலராகும். அம்மலர்கள் தொடுக்கப்பெற்றுத் திருவள்ளுவப் பெருந்தகைக்கு மாலையாகச் சூட்டப்பட்டுள்ளன. அஃது ஒரு தனி நூல் போன்று 'திருவள்ளுவ மாலை' என்னும் பெயருடன் உள்ளது. அதன்கண் இவரது வாழ்விடத்தைக் குறிப்பாகக் குறிக் குப் பாடல்கள் சில தென்படுகின்றன.

புறச்சான்றில் மதுரை.

"மாதாது பங்கி மறுவில் செந்நாப்

போதார் புனற்கூடற்க ச்சு’

"வைவைத்த கூர்வேல் வழுதி மனம்மகிழத்

தெய்வத் திருவள் ளுவர்”

- - என்பன இத்திருவள்ளுவப் மாலையில் உள்ள இரண்டு வெண்பாக்களின் ஈற்றடிகள். முதலிற் காணப்படுவது நாங்கூர்வேள் என்னும் புலவரால் பாடப்பட்டது. "மாதாநுபங்கி என்னும் சிறப்புப் பெயர் பெற்ற பொய்யில்லா நாவைக்கொண்ட திருவள்ளுவர் மதுரை நகருக்கு அச்சு போன்று வாழ்ந்தவர்' - என்று அப்புலவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த பாடல் கீரந்தையார் என்னும் புலவரது பாடல். ‘கருங்கை ஒள் வாள் பெரும்பெயர்வழுதி என்னும் பாண்டிய மன்னன் மனம் மகிழத் தெய்வத் திருவள்ளுவர் முப்பாலாம் திருக்குறளை மொழித்தார் - என இப்புலவர்குறிப்பிடுகின்றார். இவைகொண்டு திருவள்ளுவர்? பாண்டி நாட்டு மதுரையில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதலாம்.