உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதையல்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதையல் 217 விடமாட்டேன்; உண்மையைச் சொல்லி விடுங்கள். பாம்பு கடித்து அப்பா இறக்கவில்லை. ஏதோ சூது நடந் திருக்கிறது. என்னிடம் மறைக்காதீர்கள் - “பாம்பு தானப்பா—அதுவும் சிவன் கோயில் பாம்பு!” - - "சிவன் கோயில் பாம்பு! பெரியவரே என்னை ஏன் இப்படி சித்ரவதை செய்கிறீர்கள்? அப்பா இறந்த உண் மையைச் சொல்ல முடியாதென்றால் சும்மா இருங்கள் வீண் புதிர்கள் போடவேண்டாம் ” துரை கொஞ்சம் கடுமையாக, சோகங் கலந்த குரலில் பேசிவிட்டு அப்பால் நகர்ந்தான். - "பார் பரிமளா-உன் அத்தானுக்கு மூக்கின் மேலிருக் கிறது கோபம்-உம்; எப்படித்தான் துரையோடு குடும்பம் த்தப் போகிறாயோ, நீ! " என்று பரிமளாவைப் பார்த்து கிழவர் சாவதானமாகக் கூறினார். கூ புயலில் சிக்கிய நிலையிலேயிருந்த பரிமளாவும் கீழ வரைப் பார்த்து, "உங்களுக்குத்தான் என்ன, வய தான காலத்திலே இவ்வளவு பிடிவாதம்? என்றாள். - "வாதம் - பிடிவாதம் எல்லாம் வயதான காலத்தில் தானே வரும் பரிமளா! சொல்லக் கூடிய சங்கதியாயிருந் ல் இன்னேரம் சொல்லியிருக்க மாட்டேன்?" 66 இதைக் கேட்ட துரை கோபத்தோடு, ஆமாம் - சொல்லக் கூடாத சங்கதி; அவ்வளவு கேவலமான சங்கதி; இதைவிடக் கேவலமான சங்கதிகளையெல்லாம் புத்தகம் பத்த-மாக எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். நடக்காத விஷயங்களை எழுதி நாலு காசு திரட்டுவதற்கென்றே நாடோடி மனிள் சிலர் கையிலே பேனா பிடிக்கிறார்கள் -இவர் என, நடந்த விஷயத்தைச் சொல்ல இவ் காட்டுகிறார்!" வளவு பூச்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதையல்.pdf/221&oldid=1719490" இலிருந்து மீள்விக்கப்பட்டது