பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எனினும், உலகிலே பெரும்பாலான மக்கள் 1996 ம் ஆண்ே (கலி 5058) புத்த வருடம் 2,500 எனக்கொண்டு. இவ்வாண்() மே மீ" 24 வ (வைகாசிப் பூர்ணிமை)யன்று பெருமானின் 2,000 ஆவது பிறந்த தினத்தை ஜயந்தியாகக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர் அவர் அவதரித்த இந்திய நாட்டில் நாடும் நகரும் நன்கறியும் டி இவ்விழா கொண்டாடப் பெறுகின்றது. இந்த ஜயந்தியில் அது All) காணிக்கையாக இந்நூல் வெளிவருகின்றது. எண்பது ஆண்டுகள் இந்திய நாட்டில் தங்கியிருந்து அருப|பத்தை உபதேசித்து வந்த புத்தர் பெருமானுக்கு இந்த நாடும். லகமுமே மிகவும் கடமைப்பட்டவை. பெளத்த தருமம் நிலைபெறுத தழைத்தோங்கியிருந்த காலத்திலேயே இந்தியா செல்வமும் செழிப்பும் பெற்று உலகின் நடுநாயகமாக விளங்கி வந்தது என்பதைச சரித்திரத்திலே காணலாம். கோசல நாட்டிலும், அதைச் சுற்றியிருந்த, பிராந்தியங்களிலுமே பரவியிருந்த பெளத்த தருமத்தை வக பெருஞ் சமயமாக்கி உயர்த்திய அசோக சக்கரவர்த்தி மாllய மன்னர்களிலே முதன்மையானவராக இன்றளவும் கருதப்பெற்று வருகிறார். பெளத்த தருமத்தின் விளைவாக நாடெங்கும் கல்வியும் கலைகளும் பெருகி வளர்ந்தன: சிற்பங்களும் சிலைகளும. எக்காலத்தும் இல்லாத முறையில் செழித்துப் பெருகின. சாதி ஏற்றத்தாழ்வுகள் குறைந்து, எங்கும் சமரச மனப்பான்மை தழைத்தோங்கி வந்தது. புத்த ஞாயிற்றின் ஒளி ஆசியா கண்டத்தின் பல நாடுகளிலும் இருளகற்றி, மக்கள் மன.ப.பிலுள். ஊற்றுக்கண்களைத் திறந்து வைத்து. எங்கனும் ஒரு புது வாழ்வை ஆரம்பித்து வைத்தது சீனாவிலும், ஜப்பானிலும், கொரியாவிலும், தாய்லாந்திலும், ஜாவாவிலும், சுமத்திராவிலும், பர்மாவிலும், இலங்கையிலும். நேபாளத்திலும், திபேத்திலும் மற்றும் பல இடங்களிலும் பெளத்தம் பல்கிப் பெருகி வந்தது. பெளத்த பிக்குகளும், சிற்பிகளும், கலைஞர்களும் நான்கு திசைகளிலும் பரந்து சென்று போதிவேந்தரின் உபதேசங்களைப் பரப்பி வந்ததோடு, ஆலயங்கள் அமைத்தும், சிலைகள் நிறுவியும் நூல்கள் இயற்றியும் பெருந்தொண்டாற்றி வந்தனர். பெளத்த தருமத்தின் பண்பாட்டைப் பர்மாவில் பார்க்கலாம். போதி மாதவரின் புனிதக் கொள்கைகளை இலங்கையிலே மூல மொழியிலேயே பாதுகாத்து வைத்திருக்கின்றனர். பழம்பெரும் சீனாவில் முன்னாலிருந்த சமயங்கள் இரண்டோடு பெளத்தமும் கலந்து R