பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பெளத்த சமயத்துள் சில உட்பிரிவுகள் இருப்பினும்.இந்நூல் தேரவாத பொத்தத் திருமுறைகளை ஆதாரமாய்க் கொண்டு எழுதப் பெற்றுள்ளது. மேலை நாட்டு ஆசிரியர் பலர் மொழிபெயர்த்து ய லகிற்கு அளித்துள்ள அழியாப் பெருமையுள்ள நூல்களிலிருந்து பொறுக்கித் தொடுத்த மலர்கள் பல இதிலே இடம் பெற்றுள்ளன. தமிழ்மொழியில் பெயர்த்து எழுதியதே என் பணியாகும். இந்நூலின் அதிகார வைப்புக் கவனிக்கத்தக்கது. முதற் பாகத்தில் மனிதன் பெற வேண்டிய நற்குணங்களும், விட வேண்டிய தீக்குணங்களும் கூறப் பெற்றுள்ளன. இரண்டாம் பாகத்தில் பெளத்த தரும அடிப்படைக் கொள்கைகள் விளக்கப் பெற்றுள்ளன. தற்பயிற்சியில் ஆரம்பமாகி மால் நிருவானத்திலே முடிகின்றது. புத்தர் பொன்மொழிகளைத் தேடித்திரிகின்ற காலையில் இத்தகைய ஒருநூல் என் கையிலே கெ யாமையே இந்தநூலை நான் எழுதுவதற்குக் காரணமாக அமைந்தது இத்துடன் சேர்த்துப் படிக்க வேண்டிய நூல் தம்மபதம். தருமராஜரென்று போற்றப் பெறும் புத்தர் பெருமானது விரிவான சரிதையை அடியேன் போதிமாதவன் என்ற நூலாக எழுதியுள்ளேன். . வத்த சமயக் கொள்கைகளைப் பற்றிப் பெளத்த தருமம்' என்ற நூலொன்றும் எழுதியுள்ளேன். திருநெல்வேலி ப. ராமஸ்வாமி o Fin L" T1 ... 2 {నె でー