உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சத்தியத்தையே தீபமாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். சத்தியத்தையே அடைக்கலமாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். உங்களைத் தவிர வேறு சரணடைய வேண்டிய எவரையும் நாாடவேண்டாம்! "

  • *

என் பிக்குகளிடையே, இப்பொழுதோ, அல்லது நான் மரித்தபிறகோ, எவர்கள் தமக்குத் தாமே தீபமாயும், வெளியே எவ்வித உதவியும் தேடாமல், தமக்குத் தாமே அடைக்கலமாயும், சத்தியத்தையே தீபமாகப் பற்றிக்கொண்டும், சத்தியத்தையே தமது அடைக்கலமாகப் பற்றிக்கொண்டும், தம்மைத் தவிர வெளியே எவரிடமும் அடைக்கலத்தை நாடாமலும் இருக்கிறார்களோ, அவர்களே (இலட்சிய) சிகரத்தை அடைவார்கள். ஆனால் அவர்கள் கற்க வேண்டியதில் ஆர்வத்தோடு இருக்க வேண்டும்! "

  • *

கூரை செம்மையாக வேயப்பட்ட வீட்டினுள் மழைநீர் இறங்காதது போல், நன்னெறிப் பயிற்சியுள்ள மனத்தினுள் ஆசைகள் நுழைய முடியாது. '

  • *

சாத்திரங்கள் அனைத்தையும் கற்று ஒப்பித்தாலும், வாழ்க்கையில் அவற்றின்படி நடக்காதவன், ஊரார் பசுக்களைக் கணக்கிட்டு எண்ணும் ஆயனைப்போன்றவன். சமய வாழ்வில் சமணன்'அடையவேண்டிய பயனை அவன் பெற முடியாது.

  • *

நீரை நெறிப்படுத்திச் செல்வர் சிற்பக் கலைஞர் அம்பை நேராக நிமிர்த்துவர் வில்லாளிகள், மரத்தில் (சித்திரங்கள்) பொளிப்பார்கள் தச்சர்கள் தம்மைத் தாமே அடக்கியாள்வர் அறிஞர். '

  • *

தேர்ப்பாகன் குதிரைகளை அடக்கிப் பழக்கியிருப்பதுபோல, இந்திரியங்களை அடக்கி, அகங்காரத்தை அகற்றி, ஆசையாகிய கறைகளில்லாதிருப்பவனைக் கண்டு தேவர்களும் பொறாமைப் படுகிறார்கள். '

சமணன் சிரமணன் - சிரத்தையோடு பெளத்த தருமத்தைப் பின்பற்றுவோன். ஜைன சயத்தோரையும் சமணர் என்பது வழக்கம்,

சிற்பக்கலைஞர் எஞ்சினீயர்கள்


16. புத்தரின் போதனைகள்