பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. சிந்தனை இவ்வுலகில் தோன்றிய ஒரு மனிதன் முறையான சிந்தனையினால் நன்மையிலே திளைத்திருக்க ஆரம்பிக்கிறான். செல்வமும் அழகும் நிலையாமையை அவன் கண்டுகொள்கிறான். தருமமே அவனுக்கு நிகரற்ற அணியாக விளங்குகின்றது. ஆசையைத் தூண்டக்கூடிய ஒவ்வொரு விஷயத்தையும் அவன் எப்போதும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அவாவின்மையால் ஏற்படும் வலிமையைப் பெறுகிறான். வெளி உதவியைச் சார்ந்து நின்றால், அவன் துக்கமே பெறுகிறான்; தன்னம்பிக்கை கொண்டவுடன், அவனுக்கு வலிமையும் இன்பமும் கிடைக்கின்றன. " + Ar மனிதனை மனோதர்மமே உருவாக்குகின்றது; சிந்தனைகளே அதன் அடிப்படை, சிந்தனைகளாலேயே அது ஆக்கப்படுகின்றது. மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும், வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வது போல், துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும். '

  • *

மனிதனை மனோதர்மமே உருவாக்குகின்றது; சிந்தனைகளே அதன் அடிப்படை, சிந்தனைகளாலேயே அது ஆக்கப்படுகின்றது. மனிதன் தீய எண்ணத்தோடு பேனொலும், செயல் புரிந்தாலும், வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல், துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும், ! + Ar மனிதனை மனோதர்மமே உருவாக்குகின்றது; சிந்தனைகளே அதன் அடிப்படை, சிந்தனைகளாலேயே அது ஆக்கப்படுகின்றது. மனிதன் நல்லெண்ணத்துடன் பேசினாலும், செயல்புரிந்தாலும், நிழல் தொடர்ந்து செல்வதுபோல், இன்பம் அவனைத் தொடர்ந்து செல்லும். ' + or அட்க்குவதற்கு அரிதாயும் துடிப்புள்ளதாயும், தன் போக்குப்படி திரிவதாயுமுள்ள சித்தத்தை அடக்குதல் நல்லது; அடக்கியாளப் பெற்ற சித்தம் சுகமளிக்கும். ' A. A. 18 புத்தரின் போதனைகள்