உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நான்காம் தியானம்: முன்னால் பெற்றிருந்த இன்பத்தையும் துன்பத்தையும் துறந்து, அவர் நான்காவது தியானத்தில் பிரவேசிக்கிறார்; இதில் இன்ப துன்ப                        உணர்ச்சிகள் நீங்கியிருக்கும், பரிசுத்தமான சமதத்துவ நிலை ஏற்பட்டிருக்கும். '

★★

ஒ பிக்குகளே! மக்கள் பரிசுத்தமடைவதற்கும், துக்கத்தையும், துயரால் அரற்றுதலையும் கடப்பதற்கும், சோகத்தையும், கையறு நிலையையும் ஒழிப்பதற்கும், தருமத்தைப் பெறுவதற்கும், நிருவான முக்தியை அடைவதற்கும், இது ஒன்றுதான் வழி: 'ஸ்திபட்டாணங்கள்' என்ற நான்கு முறைகளுள்ள இந்த வழிதான் அது. அந்த நான்கு முறைகள் எவை


உடல் (கந்தங்களின் சேர்க்கை) என்று கருதி, பிக்கு, ஊக்கத்தோடும், தன்னடக்கத்தோடும், விலகியுள்ள ஆசைகளையும் அயர்வையும் அடக்கிகொண்டு நிலைத்திருப்பார். இதேபோல் உணர்ச்சிகள், சிந்தனை மனநிலைகளைப் பற்றியும் தியானம் செய்வார். '



  • ஸ்திபட்டாணங்கள் - ஸ்திப் பிரஸ்தானங்கள்; அவை உடல், புலன்களின் உணர்ச்சிகள், உள்ள உணர்ச்சிகள், சிந்தனை, மனநிலைகள் ஆகியவற்றைப் பற்றித் தியானம் செய்யும் நான்கு முறைகள். ". .



ப. ராமஸ்வாமி \ 23