பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6. கருத்துடைமை ஒளியிலிருந்து இருளுக்குச் செல்வதற்கும். இருளிலிருந்து ஒளிக்குச் செல்வதற்கும் வழிகள் இருக்கின்றன. இருளிலிருந்து அதிக இருளுக்கும், ஒளியிலிருந்து அதிக ஒளிக்கும் போவதற்கும் வழிகள் இருக்கின்றன. ஞானி அதிக ஒளியைப் பெறுவதற்குத் தன்னிடமுள்ள ஒளியைப் பயன்படுத்திக் கொள்வான். எப்போதும் அவன் உண்மையை உணர்ந்துகொள்வதற்காக இடைவிடாமல் முன்னேறிக் கொண்டே யிருப்பான். ੋਂ ஒபிக்குகளே!துறவி கருத்தோடும், விழிப்போடும் இருக்க வேண்டும். துறவி. இவ்வுலகில் இருக்கும்போது, உடலின் ஆசையாலும், புலன்களின் வேட்கையாலும், தவறான ஆராய்ச்சியாலும் எழும் துக்கத்தை வெல்ல வேண்டும். நீங்கள் எதைச் செய்தாலும், மன உறுதியுடன் செய்யுங்கள். உண்ணல், பருகல், நடத்தல், நிற்றல் முதலியவற்றிலும், உறங்கல் அல்லது விழித்திருத்தல், பேச்சு அல்லது மெளனம் ஆகிய எதிலும் கருத்தோடு நடந்து கொள்ளவும். (5)

  • *

அறிவாளர்கள் எப்போதும் விேர முயற்சியுடனும், தளராத உறுதியுடனும், தியானத்து னும், மகோன்னதமான விடுதலைப் பேறும் ஆனந்தமுமாகிய நிருவானத்தை அடைகின்றனர். ' W

அறிவாளி, மடிமையில் ஆழ்ந்தவர் நடுவே, முயற்சியுடையோனா கவும், உறங்குவோர் நடுவே, விழிப்புள்ளவனாகவும் இருப்பான்; பந்தயக் குதிரை வாடகைக் குதிரையைப் பிந்த விட்டுவிட்டு முன்னேறிப் பாய்வதுபோல், அவன் மற்ற யாவர்க்கும் முன்னால் செல்கிறான். ' לו לה சிரத்தையின்றிச் செய்யும் காரியமும், ஒழுங்காகக் கடைப்பிடிக்காத விரதமும், மனமாரப் பேனாத பிரமசரியமும் பெரும் பயனை அளிக்க மாட்டா. '

  • *

(இராஜ்யத்தின்) எல்லைப்புறத்தில் இருக்கும் நகரத்தை உள்ளும். வெளியும் அரண் செய்து காப்பதுபோல், ஒருவன் தன்னைக் காத்துக்கொள்க. கனநேரத்தையும் வீணாக்க வேண்டாம், ஒவ்வொரு ப. ராமஸ்வாமி | 25