பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


|lெவுெதியதையும் நல்வழியிலே பயன்படுத்தாமல் நிமிஷங்களை வீணாகக் கழித்தவர்கள் நியத்தில் விழும்போது வருந்துவர்.' A k கருத்தில்லாமல் இருக்க வேண்டாம், மனத்தின் சிந்தனைகளை அடக்கிக் காக்கவும். சேற்றில் விழுந்த யானையைக் கரையேற்றுவது போலத் தீய வழியிலிருந்து உன்னை மீட்டுக் கொள்க. '

  • *

பிக்குகளே பிக்கு கருத்தோடும், தன்னடக்கத்தோடும் இருந்து வருவாராக. இதுவே உங்களுக்கு நான் செய்யும் உபதேசம். பிக்குகளே, ஒரு பிக்கு கருத்தோடிருப்பது எப்படி? பிக்கு, உடல் (கந்தங்களின்) கலப்பு என்பதை உணர்ந்து, ஊக்கத் தோடும், அமைதியோடும், கருத்தோடும், உலகிலுள்ள ஆசையையும் அதிருப்தியையும் அடக்கிக்கொண்டும் இருப்பார். இதுதான் ஒரு பிக்கு கருத்தோடு இருத்தல். பிக்குகளே ஒரு பிக்கு தன்னடக்கத்தோடு இருத்தல் எங்ங்னம்? பிக்குகளே பிக்கு வெளியே செல்லும்போதும் இருப்பிடத்திற்குத் திரும்பும்போதும், அடக்கமாக நடந்து கொள்வார். முன்னால் நோக்குவதிலும், பின்புறம் நோக்குவதிலும் அவர் அமைதியோடு நடப்பார். (உடலையோ, கைகளையோ) வளைப்பதிலும், நீட்டுவதிலும், அவர் அமைதியோடிருப்பார். தம் உடைகளை அணிவதிலும், திருவோட்டை ஏந்துவதிலும், உண்ணல், பருகல், சுவைத்தல், விழுங்குதல், உடலின் உபாதைகளைக் கழித்தல், நடத்தல், நிற்றல், அமர்தல், உறங்கல், விழித்தல், பேசுதல், மெளனமாயிருத்தல் ஆகிய எல்லாவற்றிலும் அவர் அமைதியோடிருப்பார். பிக்குகளே. இதுவே பிக்கு தன்னடக்கத்தோடு இருத்தலாகும்." " நிரயம் - நரகம், கந்தங்கள் ஐந்து உருவம் (ரூப ஸ்கந்தம்), நுகர்ச்சி (வேதனா ஸ்கந்தம்). குறி (லம்ஜ்ஞா ஸ்கந்தம்). பாவனை (ஸம்ஸ்கார ஸ்கந்தம்), உணர்வு (விஞ்ஞான ஸ்கந்தம். 26 | புத்தரின் போதனைகள்