உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. ஒழுக்கம் பரிசுத்தமான ஒழுக்கத்திலிருந்து சுயமான வீரியம் பிறக்கின்றது; அதுவே அபாயங்களினின்றும் ஒருவனைக்காக்கும். நாம் பேரின்பத்திற்கு ஏறிச் செல்வதற்கு ஏற்ற ஏணி போலத்துய ஒழுக்கம் விளங்குகின்றது. " לו לו புஷ்பத்தின் வாசனை காற்றை எதிர்த்து வீசாது; சந்தனம், தகரம்', மல்லிசை முதலிய (எல்லா) மலர்களின் மணமும் அப்படித்தான். ஆனால் நன்மக்களின் (புகழ்) மணம் காற்றையும் எதிர்த்து வீசுகிறது. நல்ல மனிதனின் புகழ்மணம் நாலு திசையிலும் பரவி நிற்கிறது. ' לה לה எந்தக் கருமத்தைச் செய்தால் பின்னால் மனம் நோகுமோ, எதன் பயனை அழுதுகொண்டே அநுபவிக்க வேண்டியிருக்குமோ, அது நற் செயல் ஆகாது.' הלך לו உயிர்களின் செயல்கள் யாவும் பத்து விஷயங்களால் தீயவை ஆகின்றன. அந்தப் பத்து விஷயங்களையும் நீக்கிவிட்டால் அவை நல்லவை ஆகின்றன. உடலின் பாவங்கள் மூன்று, நாவின் பாவங்கள் நான்கு, உள்ளத்தின் பாவங்கள் மூன்று உள்ளன. உடலின் பாவங்கள் கொலை, களவு, வியபசாரம் நாவின் பாவங்கள் பொய்மை, புறங்கூறல், நிந்தனை, பயனற்ற பேச்சு: உள்ளத்தின் பாவங்கள் பொறாமை, துவேஷம், தவறு (உண்மையை உள்ளவாறு உணராமை). ஆதலால் உங்களுக்குக் கீழ்க்கண்ட விதிகளை அளிக்கிறேன்: 1. கொல்ல வேண்டாம், உயிரைப் பேணுங்கள். 2. திருட வேண்டாம், பறிக்கவும் வேண்டாம்; ஒவ்வொருவரும் தமது உழைப்பின் பயனைத்துய்ப்பதற்கு உதவி செய்யுங்கள். 3. தீயொழுக்கத்தை (வியபசாரத்தை) விலக்குங்கள்:கற்பு நெறியில் வாழ்க்கையை நடத்துங்கள். 4. பொய் பேசவேண்டாம்; தக்க முறையில் பயமில்லாமலும், அன்பு கலந்த உள்ளத்துடனும், உண்மையைப் பேசுங்கள். தகரம் - ஒருவகை வாசனைச் செடி, இதிலிருந்து வாசனைப் பொடி தயாரிப்பதுண்டு. ப. ராமஸ்வாமி 29