பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


13. கோபம் வழி தவறிச் செல்லும் இரதம் போலப் பொங்கி வரும் கோபத்தை அடக்கியாள்பவனையே நான் சரியான சாரதி என்று சொல்வேன்; மற்றையோர் கடிவாளக் கயிற்றை(க் கையில்) வைத்திருப்பவர்களே. ' As of வாக்கினால் வரும் கோபத்தை அடக்கிக் காக்கவும். நா அடக்கத்தில் பழக வேண்டும். வாக்கினால் உண்டாகும் தீமையை ஒழித்து, நல்ல ஒழுக்கத்தைப் பேணிவருக. † Tr மனத்தினால் வரும் கோபத்தை அடக்கிக் காக்கவும். மனஅடக்கத்தில் பழக வேண்டும். மனத்தில் உண்டாகும் தீமையை ஒழித்து, நல்ல ஒழுக்கத்தைப் பேணி வருக. | 34 புத்தரின் போதனைகள்