பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14. நல்வினைகள் நல்லதை விரைவாக நாட வேண்டும்; பாவத்திலிருந்து சித்தத்தை விலக்க வேண்டும். புண்ணிய கருமத்தைச் செய்வதில் தாமதித்தாள், மனம் பாவத்தில் திளைக்க ஆரம்பித்துவிடும். ' + or மனிதன் புண்ணியத்தைச் செய்வானாகில், அதையே திரும்பத் திரும்பச் செய்வானாக. அவன் அதில் திளைத்திருக்கட்டும்; புண்ணிய மூட்டை மிகவும் இன்பகரமானது. '

  • *

கையில் புண்ணில்லாதவன் விஷத்தைக் கையால் தொடலாம்: புண்ணில்லாதவனை விஷம் பாதிப்பதில்லை. தீய காரியத்தைச் செய்யாதவனைப் பாவம் பாதிக்காது. ' ++ பாவத்தை நல்வினையால் மறைக்கும் ஒருவன், மேகத்திலிருந்து விடுபட்ட சந்திரனைப்போல், இந்த உலகில் ஒளிபெறச் செய்கிறான். ' + or நிந்தனையை ஒழித்தல், பிறரை வருத்தாமலிருத்தல், அறத்திற்கு அடங்கியிருத்தல், நிதான உணவு, ஏகாந்தமாயிருந்து உயர்ந்த சிந்தனைகளில் ஒருமைப்பட்டிருத்தல் - இதுவே புத்தருடைய உபதேசம். ++ தூர தேசத்தில் நெடுங்காலம் சென்றிருந்தவன் சேமமாகத் திரும்பி வருகையில், சுற்றத்தாரும், நண்பர்களும், அன்பர்களும் அவனைக் களிப்போடு வரவேற்று உபசரிப்பார்கள். அவ்வாறே புண்ணியம் செய்தவன் இவ்வுலகை விட்டு மறு வகம் செல்லும்போது, அவன் செய்த புண்ணியங்கள் (முன்னதாக அங்கே சென்று), சுற்றத்தார் அன்பன் திரும்பி வருகையில் வரவேற்பது பாவ. அவனை அங்கே வரவேற்கின்றன.' ++ நல்லோர், இமயமலையைப்போல், நெடுந்துபதி 'ரு| lத பிரகாசிக்கின்றனர்; ஆனால் தீயோர் ()ாவின் ()ருவ வய்த அம்புகளைப்போல், கண்ணுக்கே புலனாவதில்லை. A M பாயங்வாமி | படி