பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


...தானம்,ஒழுக்கம், தன்னடக்கம், ஆணவத்தை அடக்கல் ஆகியவை, ஆணுக்கும், பெண்ணுக்கும் அரிய புதையல் தனமாகும். மற்றவர்கள் அதை எடுத்துக்கொள்ள முடியாது, திருடர்கள் அதைத் திருடிக் கொண்டுபோக முடியாது. ஞானி நற்கருமங்களைச் செய்து வரட்டும்; ஒருவருக்குப் பின்னால் தொடர்ந்து செல்லக்கூடிய புதையல் அது ஒன்றுதான். ' இந்தப் புதையலிலிருந்து இம்மையிலே செழிப்பும். மறுமையிலே பேரின்பமும், நிருவான முக்தியும் பெறமுடியும். தெளிவான நற்காட்சி. உள்ளத்தின் விடுதலை, சீடன் அடைய வேண்டிய பயிற்சிகளின் நிறைவு, தனக்குத்தானே ஞான ஒளி பெறுதல், ஆகியவை அனைத்தும் - புத்தநிலைகூட இந்தப் புதையலிலிருந்து கிடைக்கும். 36 | புத்தரின் போதனைகள்