உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17. நண்பர்கள் (சம்சார) யாத்திரையில், ஒருவன், தனக்கு நிகரான, அல்லது மேலான நண்பன் துணைக்குக் கிடைக்கவில்லையானால், தன்னந்தனியே தொடர்ந்து செல்வானாக மூடனுடைய துணை உதவியாகாது. '

  • +

தீயோருடன் சேர வேண்டாம்; இழிந்தவருடன் இணங்க வேண்டாம்; ஒழுக்கமுள்ளவரோடு உறவாடுக சான்றோர் தொடர்பை மேற்கொள்க. '

மூடனுடன் குலாவுவோன் நெடுங்காலம் துன்புறுவான். மூடரோடு குலாவுதல், பகைவருடன் பழகுவதைப்போல், எப்போதும்துக்கந்தான். அறிவாளரின் இணக்கம்,சுற்றத்தாரோடு பழகுவதைப்போல இன்பமே பயக்கும். '

அறிவாளியாயும், உன்னோடு ஒத்துப் பழகக்கூடியவனாயும், அடக்கத்தோடு நல்லொழுக்கமுடையவனாயும் ஒரு தோழன் கிடைப்பானாகில், எல்லா இடையூறுகளையும் கடந்து அவனுடன் கருத்தோடும் மகிழ்ச்சியோடும் நட்புக் கொள்வாயாக, !