பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18. மெளனம் உடைந்துபோன மணி ஒசையற்றிருப்பதுபோல், உன்னை நீ அடக்கிக்கொண்டு அமைதியாயிருந்தால், நீ நிருவானத்தை அடைந்தவனாவாய். ஏனெனில், நீ கலக்கம் நீங்கிச் செயலற்ற நிலையிலிருக்கிறாய். ' לו לה பிக்குகளே! நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்பொழுது, புண்ணியமான விஷயங்களைப் பற்றிப் பேசுங்கள், அப்படியில்லை யானால், மேலான (ஆரிய) மெளனத்தைக் கைக்கொள்ளவும்; இந்த இரண்டில் ஒன்றையே நீங்கள் மேற்கொள்ள வேண்டும். " ஆரிய மெளனம் அமைதியான உள்ளத்துடனும், ஒருமைப்பாட்டுடனும் சிந்தனை தவறாமல் இருக்கும் நிலை. 40 | புத்தரின் போதனைகள்