பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


19. இன்சொல் ஆரியனுடைய (மேலானவனுடைய) வார்த்தைகள் அறிவளிப்ப தோடு, மகிழ்ச்சியும் அளிப்பவை என்பது உண்மைதான். ' ++ செருக்குடன் கோபம் நிறைந்தவர்கள் கோபமாய்ப்பேசுகிறார்கள்; மற்றவர்கள் குறைகளை அவர்களைச் சந்திக்கும்போது கூறுவார்கள்; நிந்திப்பதிலும், குற்றங்கள் காண்பதிலும், தமது பகைவரின் வீழ்ச்சியிலும் இன்படைகிறார்கள். ஆனால் இத்தகைய பழக்கங்களை ஆரியர்கள் (மேலோர்கள்) ஒருகாலும் பின்பற்ற மாட்டார்கள். ப. ராமஸ்வாமி | 41