பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22. தீவினைகள் புதிதாய்க் கறந்த பால் போலே, பாவச் செயல் உடனே புளிப்பாக மாறுவதில்லை: நீறு பூத்த நெருப்பைப்போல் கனன்றுகொண்டேயிருந்து, அது மூடனைத் தொடர்கிறது.

மனிதன் பாவத்தைச் செய்துவிட்டால், அதையே திரும்பத் திரும்பச் செய்யாதிருப்பானாக. அவன் அதில் திளைத்திருக்க வேண்டாம்: பாவ மூட்டை மிகவும் துக்ககரமானது.

'என் பக்கம் அண்டாது' என்று பாவத்தை இலேசாக எண்ணவேண்டாம்; துளித் துளியாக விழும் தண்ணிராலேயே குடம் நிரம்பிவிடும். பேதை கொஞ்சம் கொஞ்சமாகப் பாவத்தைச் சேர்த்தாலும், அவள் பாவத்தால் நிரம்பிவிடுகிறான். '

ஏ மானிடா! இதை அறிந்துகொள்! பாவத்தை எளிதில் அடக்க முடியாது. பேராசையும் தீயொழுக்கமும் உன்னைத் தீராத துக்கத்தில் அழுத்தாமலிருக்கட்டும். '

காம வெறி, போன்ற அனல் வேறில்லை; துவேஷத்தைப்போல் பற்றிக் கொள்ளும் முதலை வேறில்லை; (தெளிவின்றி) மயங்குதலைப் போன்ற வலை வேறில்லை; ஆசைகளைப்போல் (அடித்துக்கொண்டு போகும்) ஆறு வேறில்லை.

பிக்குகளே உயிர்க்கொலை தீது, களவு தீது, சிற்றனப உணாசசிக்கு அடிமைப்படுதல் தீது, பொய் பேசுதல் தீது, நிந்தனை தீது, பயனற்ற பேச்சு தீது, பொறாமை தீது, துவேஷம் தீது, போலிக் கொள்கைகளைப் பற்றிக் கொண்டிருத்தல் தீது: பிக்குகளே. இவை அனைத்தும் தீவினைகள். '

சகுனங்கள், நட்சத்திரங்கள், கனவு சாத்திரங்கள், குறிக்ளைக் கொண்டு (நன்மை தீமைகளைப்) பார்த்தல் ஆகியவற்றை அறவே ஒதுக்கிய பிக்கு சரியான வழியிலே செல்வோனாவான்; அவைகளின் தீமைகளிலிருந்து அவள் விடுபட்டவன். '

நட்சத்திரங்கள் பார்த்தல், ஜோசியம், குறிகளைக் கொண்டு அதிர்ஷ்டங்கள் துரதிர்ஷ்டங்களைக் கூறுதல், நன்மை தீமைகளை முன்னதாக அறிந்துகூறுதல் - இவைகள் யாவும் தகாத செயல்களாம். '

ப. ராமஸ்வாமி 45