23. ஐயமும் திரிபும் ஒரு மனிதனின் உடலில் விடம் தோய்ந்த அம்பொன்று பாய்கிறது. அவனுடைய நண்பர்கள் உடனே மருத்துவரை அழைத்து வருகின்றனர். மருத்துவர் புண்ணிலிருந்து அம்பை இழுக்க ஆரம்பிக்கிறார். அடிபட்டவன், நில்லுங்கள் அம்பை எய்தது யார்? ஆணா, பெண்ணா, பிராமணனா, வைசியனா, சூத்திரனா? அவன் குடும்பம் எது? அவன் நெட்டையா, குட்டையா? அம்பு எத்தகையது? இவற்றையெல்லாம் நான் அறிந்துகொள்ளும்வரை அம்பை எடுக்க விடமாட்டேன் என்று பலபடக் கூறினால், என்ன நேரும்? இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் விடைகள் கிடைக்குமுன்பே அந்த மனிதன் உயிர் துறப்பான். இதுபோலவே, அப்பாலைக்கு அப்பால் என்ன இருக்கிறதென்பது போன்ற தன் கேள்விகளுக்கெல்லாம் விடையறிய விரும்பும் சீடன், துக்கம், துக்க காரணம், துக்க நீக்கம், துக்க நீக்க மார்க்கம் ஆகியவைகளைப் பற்றிய உண்மையை உணருமுன்பே மரித்துவிடுவான்."
சந்தேகம் தோன்றுவது இயற்கை, பல தலைமுறைகளாகப் பல இடங்களிலே தொடர்ந்து வந்துள்ளவை என்பதற்காக மட்டும் பழைய சம்பிரதாயங்களை நம்பவேண்டாம்; பலர் கூடிப் பேசுகிறார்கள் என்றோ, பரப்பி வருகிறார்கள் என்றோ, வதந்திகளாகிய எதையும் நம்ப வேண்டாம்; எவரோ பழங்காலத்துமுனிவர் ஒருவர் எழுதி வைத்ததைக் காட்டினால், அதை நம்பிவிட வேண்டாம்; நீங்களாகக் கற்பனை செய்து கொள்ளும் விஷயம் ஆச்சரியமானதாயிருப்பதைக் கொண்டு, அது ஒரு தேவனாலோ, வேறு அற்புதத் தேவதையாலோ, தோற்றுவிக்கப் பெற்றது என்று நம்பவேண்டாம். ஒரு விஷயத்தைக் கண்ணால் கண்டு, கருத்தால் ஆராய்ந்து, அது பகுத்தறிவுக்குப் பொருத்தமாயும், சகலருக்கும் நன்மை பயக்கக்கூடியதாயும் இருந்தால், அதை ஏற்றுக்கொண்டு, அதன்படி நடக்கவும். '
- *
முதலாவது நமக்கத் தேவையானது 'ஸம்மா திருஷ்டி (என்ற நற்காட்சி). ஐயம்,திரிபுகளுள்ள கொள்கைகளை நீக்கி, உண்மையைக் கண்டு கொள்ள அதுவே உதவியாகும். அதன் பின்பு அவாவின் பிடியிலிருந்து விடுதலை பெறுதல் எளிது. "
46 / புத்தரின் போதனைகள்