பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொய்யில் மெய்யைக் கற்பனை செய்து கொண்டு, மெய்யின் பொய்யைக் காணும் மருளுடையார் மெய்ப்பொருளை ஒருபோது அட்ைவதில்லை; அவர்கள் வெறும் ஆசைகளைக் கொடாம். அலைவார்கள். '

  • *

மெய்ப்பொருளை உணராமல் ஐயத்தில் உழல்வோனை எதுவும் புனிதமாக்கிவிடாது. ஆடையின்றி அலைதல், சடைத்தலை, புழுதியால் (உடல்) மாசடைதல், உபவாசம், வெறுந்தரையில் கிடத்தல், நீறு பூசுதல், அசைவில்லாமல் அமர்ந்திருத்தல் ஆகிய எதுவும் புனிதமாக்கிவிடாது. Wr or இருளே இவ்வுலகின் இயற்கை, இங்கு சிலரே (விழிபெற்று) உண்மையைக் காண முடியும். வலையிலிருந்து தப்பிய பறவைகள் போல, சிலரே சுவர்க்கம் செல்கின்றனர். ' Hk Hk பயங்கொண்ட-மனிதர்கள் மலைகளையும், வனங்களையும், புனிதமான மரங்களையும், பண்ணியத் தலங்களையும் புகலிடமாகக் கொள்கிறார்கள், ! ++ இந்த அடைக்கலம் நல்ல பாதுகாப்புஅல்ல. இந்த அடைக்கலத்தால் மனிதன் வேதனைகளிலிருந்து விடுதலை பெறுவதில்லை. ' ப. ராமஸ்வாமி | 47